TN Headlines: சமூக பணியாளர்களுக்கு முதல்வர் விருது! இன்று மழைக்கு வாய்ப்பு - இதுவரை நடந்தது?
3PM Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
Youth Awards 2024 : சமூகப் பணியாற்றும் இளைஞரா நீங்கள் ? முதலமைச்சர் தரும் விருதை பற்றி தெரியுமா ?
தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் சமூகப் பணிகளை செய்து வரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வருடந்தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியினை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர்மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆணடும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதோடு ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை வழங்குவார்கள். மேலும் படிக்க..
பயத்தில் பிரதமர் மோடி உளறுகிறார் - பிரதமரை விளாசும் செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது : கேரள மாநிலம் வயநாட்டில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வந்துள்ளோம். கடந்த முறை வயநாட்டு தொகுதியில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இம்முறை ஐந்தரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பாசிச சக்திகளை ஒழிக்க வயநாட்டில் இருந்து ஒரு தீப்பொறி கிளம்பி இருக்கிறது. மேலும் படிக்க..
TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 28 ஆம் தேதி வரை தென் தமிழக கன்னியாகுமாரி, திருநெல்வேலி மாவட்டங்கள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
Child Kidnap:மதுரை ரயில் நிலையம் வெளியே 6 மாத பெண் குழந்தை கடத்தல்..!
நெல்லை மாவட்டம் டோனாவூரை சேர்ந்த சுந்தரி என்பவரின் 6 மாத பெண் குழந்தையான சத்யபிரியா மதுரை ரயில் நிலையம் வெளியே கடத்தப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாயுடன் குழந்தை தூங்கிக் கொண்டிருந்த நிலையில், கடத்திச் சென்றதாக தகவல் தெரியவந்துள்ளது. சுந்தரி அருகில் படுத்துக்கொண்டிருந்த மர்ம நபர் குழந்தையை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படிக்க..
Mettur Dam: நான்காவது நாளாக 57 கன அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை - இன்றைய நீர் நிலவரம்
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 57 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 57 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 57 கன அடியாக குறைந்துள்ளது.மேலும் படிக்க..