TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது?
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், அடுத்த மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
Combined Civil Services Examination - IV (Group IV Services)
— TNPSC (@TNPSC_Office) September 3, 2024
Notification No: 01/2024
Date of Examination: 09.06.2024
Tentative Month of Publication of Result: October 2024
For updates regarding the selection process, check the Selection Schedule in the Commission's Website in… pic.twitter.com/PM9IoVBZI3
சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர். இதற்கிடையே இந்த முறை புதியதாக இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கேள்விக்கு தவறான பதிலை டிக் செய்து, பிறகு அதை அடித்துவிட்டு, வேறு ஒரு பதிலைத் தேர்வு செய்தால், அந்த கேள்விக்கான மதிப்பெண், மதிப்பற்றதாக (இன்வேலிட்) கருதப்படும். இந்த முறை நடப்பாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல ஏ, பி, சி, டி என ஒவ்வொரு எழுத்துக்கும் எத்தனை விடைகள் குறிக்கப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணி, அதை மொத்தமாகப் பதிவிடவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்காகத் தனியாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/
இதையும் படிக்க: TVK Vijay : “நடிகர் விஜய் GOATஆ அல்லது FOATஆ”சக்கரவியூகத்தில் நுழையும் த.வெ.க. - நடக்கப்போவது என்ன?