மேலும் அறிய

கங்கைகொண்டான் சிப்காட் பெண் ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்.. இத்தனை வசதிகள் வரப்போகுதா?

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 500 பெண் ஊழியர்கள் தங்கும் வகையில் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட், டாடா பவர் ஆகியவைக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 870 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள குடியிருப்பு வளாகத்தில் டி.பி. சோலார் (T.P Solar Ltd.) நிறுவன தொழிற்சாலையில் பணிபுரியும் 500 பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் (TNIHPL) மற்றும் டாடா பவர் சோலார் லிமிடெட் (T.P Solar Ltd.) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

500 பெண்களுக்கு தங்கும் வசதி:

சிப்காட் நிறுவனமானது, 2022-ம் ஆண்டில் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம் (TNIFMC) மற்றும் டைடல் நிறுவனத்துடன் (TIDEL) இணைந்து தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் (TNIHPL) என்ற சிறப்பு நோக்க முகமையை தமிழ்நாட்டில் உள்ள தொழில் துறை தொழிலாளர் நலனுக்காக உருவாக்கப்பட்டது.

தற்போது, இச்சிறப்பு நோக்க முகமை, சிறுசேரி (807 படுக்கை வசதிகள்). கங்கைக்கொண்டான் (870 படுக்கை வசதிகள்), சூளகிரி (1495 படுக்கை வசதிகள்), இருங்காட்டுக்கோட் டுக்கோட்டை (801 படுக்கை வசதிகள்) மற்றும் செய்யாறு (441 படுக்கை வசதிகள்) ஆகிய ஐந்து சிப்காட் தொழிற் பூங்காக்களில் குடியிருப்பு வளாகங்களை ரூ.204.50 கோடி திட்ட மதிப்பீட்டில் மொத்தம் 4,414 படுக்கை வசதிகளுடன் அமைத்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் 2023-2024-ன் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் திருநெல்வேலி மாவட்டம், கங்கைக்கொண்டானில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் பணிபரியும் 1,500 பெண் பணியாளர்கள் தங்குவதற்கு ஏதுவாக ரூ.50.00 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு வளாகம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் குடியிருப்பு வளாகம் ஒன்றினை சுமார் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் 870 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வளாகமானது சுமார் 1.20 இலட்சம் சதுர அடி பரப்பில் தரைதளம் மற்றும் மூன்று அடுக்கு கட்டடமாக ஆறு ஏக்கர் நிலப் பரப்பில் அமைக்கப்படவுள்ளது.

இத்தனை வசதிகளா?

இங்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான, உட்புற சாலை, குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம். தெரு விளக்குகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படும். மேலும், இங்கு, சமையலறை மற்றும் சாப்பாட்டு வசதிகள், வெளிப்புற விளையாட்டு பகுதி. தொழிலாளர்கள் அறை. ஒவ்வொரு தளத்திலும் பொழுதுபோக்கு அரங்குகள், சலவை அறைகள், உலர்த்தும் பகுதி. மருத்துவ அறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்படும்.

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற் பூங்காவில் அமைந்துள்ள டி.பி. சோலார் (TPSL) நிறுவனம் 313.53 ஏக்கர் நிலப்பரப்பில் சோலார் PV செல் மற்றும் மாட்யூல் உற்பத்தி வசதியை ரூ.4,300 கோடி முதலீட்டில், 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறது. அப்பணியாளர்களில், 80 சதவீதம் பெண் பணியாளர்கள் ஆவர்.

டிபி. சோலார் (TPSL) நிறுவன தொழிற்சாலையில் பணிபுரியும் 500 பெண் பணியாளர்கள், பயன்பெறும் வகையில் சிப்காட் நிறுவனத்தின் சிறப்பு நோக்க முகமையான தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் (TNIHPL)த்துடன் இணைந்து, சிப்காட் கங்கைக்கொண்டான் தொழிற் பூங்காவில் அமைய உள்ள குடியிருப்பு வளாகத்தில் தங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் இன்று (19.09.2024) மேற்கொள்ளப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: அடடே..! தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: அடடே..! தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: அடடே..! தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: அடடே..! தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Embed widget