மேலும் அறிய

TNEB : மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்

மின்சாரத்தை துண்டிக்கப்பட்ட பிறகும் மின் இணைப்பை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவீன காலத்தில் மின்சார தேவை

மின்சாரம் என்பது நவீன காலத்தில் இன்றியமையாத ஒன்றாகவே மாறி விட்டது. எனவே சமையல் முதல் ஐடி நிறுவன வேலைகள் வரை மின்சாரம் கட்டாய தேவையாக உள்ளது. அந்த வகையில் மின் தேவையான அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உரிய முறையில் மின் இணைப்பை பெறாமலும், மின் கட்டணம் செலுத்தாமலும் முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  மின்சார வாரியத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அந்த வகையில், பல்வேறு காரணங்களுக்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக  மின்சாரம் பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

முறைகேடாக மின் இணைப்பு

இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பின் முறைகேடாக மின் நுகர்வு நிகழ்வது நியாயமான வருவாய் இழப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நேரடி இணைப்பு துண்டிப்பு நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு வழிமுறைகளை செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் முறைகேடாக மின் இணைப்பை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. மேலும், இத்தகைய நிகழ்வுகளில், இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு அங்கீகரிக்கப்படாத பயன்பாடு கண்டறியப்படும் பட்சத்தில் முறைகேடுகளில் ஈடுபடும் மக்களிடம் கூடுதல் கட்டணம் மற்றும் அபராதக் கட்டணங்களைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நடவடிக்கையால் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் பிரச்சனைகளை வழிவகுப்பதாக தெரிவித்துள்ளது. 

மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பு

எனவே, அனைத்து மேற்பார்வை பொறியாளர்களும்  தங்கள் வட்டங்களில் நிலுவையில் உள்ள இந்த வகை பிரச்சனைகளை நேரில் ஆய்வு செய்து, உடனடி சரிசெய்தல் நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்  இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் நுகர்வு காட்டப்படும் இணைப்புகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்; அத்தகைய வழக்குகளை முறைப்படுத்தவும், மேலும் வருவாய் இழப்பைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, இணைப்பு துண்டிப்பு  பதிவுகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்கவும், தேவைப்படும் இடங்களில் முறையான நேரடி இணைப்பு துண்டிப்பை உறுதி செய்யவும், நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளிலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 கடுமையான குற்றம்- மின்சார வாரியம்

நிலுவையில் இருப்பதற்கான காரணங்கள் கூர்ந்து ஆராயப்பட வேண்டும் மற்றும் குறைபாடுகள் கண்டறியப்படும் இடங்களில் தகுந்த நடவடிக்கை தொடங்கப்பட வேண்டுமென தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் உத்தரவு வழங்கியுள்ளார். மின் கட்டணம் செலுத்தாதது அல்லது வேறு சில காரணங்களால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடங்களில், அதிகாரப்பூர்வ அனுமதியின்றி சட்டத்திற்குப் புறம்பாக மின்சாரத்தைப் பயன்படுத்துவது மின்சார சட்டம் 2003 -ன் படி கடுமையான குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Renault Kwid on EMI: ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
Embed widget