Weather Update: வெளுக்கப்போகும் மழை! 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையத்தின் எச்சரிக்கை!
18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.அதேபோல, நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
31-ஆம் தேதியான நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம்,நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/2IihPAMU2k
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 30, 2022
30/05/2022 காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ( °C) மற்றும் இயல்பிலிருந்து அதன் விலகல் (°C) pic.twitter.com/DLUlcaxjbh
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 30, 2022
24 மணி நேரத்தில் பதிவான மழையளவு [மி. மீ] pic.twitter.com/zgo8N73cuR
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 30, 2022
தென்மேற்கு பருவமழை
கோடையில் வாடி வதங்கும் இந்தியர்களுக்கு நிவாரணமாகப் பொழியும் தென்மேற்கு பருவமழை அதன் இயல்பான தொடக்க தேதியான ஜூன் 1 க்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக நேற்றே கேரளாவில் தொடங்கியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (Indian Meteorological Department) தெரிவித்துள்ளது.
கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை(South West Monsoon) தொடங்கியதை அறிவிப்பதற்கான அனைத்து அறிகுறிகளும் பூர்த்தி அடைந்துவிட்டதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அறிகுறிகள் என்னவென்றால், சராசரி கடல் மட்டத்திலிருந்து 4.5 கிமீ வரை ஆழமான மேற்கு திசை காற்று, தென்கிழக்கு அரபிக்கடலில் மேற்கு திசை காற்றின் வலிமை அதிகரிப்பு, தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் மேகமூட்டம் அதிகரிப்பு மற்றும் கடந்த 24ம் தேதி கேரளாவில் பரவலாக மழைப்பொழிவு ஆகியவை இதில் அடங்கும்.
நேற்றைய நிலவரப்படி கேரளாவின் 14 வானிலை ஆய்வு மையங்களில் 10 மையங்கள் 2.5 மில்லி மீட்டர் அளவிலான மழையை பதிவு செய்துள்ளன.முன்னதாக பருவமழை 27 மே 2022 முதல் தொடங்கும் எனச் சொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது