மேலும் அறிய

TN Weather : சென்னை & வடமாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. வங்கக்கடலில் சக்தி புயல்.. வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் வடமாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் சின்னம்: 

நேற்று (02-10-2025) காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய (ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாலை 1700 மணி அளவில் தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் கோபல்பூருக்கு அருகில் கரையை கடந்தது.

சௌராஷ்ட்ரா கடலோரப்பகுதிகள் மாற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 01-10-2025 காலை வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு நகர்ந்து, அன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 02-10-2025 அன்று நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (03-10-2025) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவி, காலை 1130 மணி அளவில் "சக்தி" புயலாக வலுப்பெற்று, துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கு-தென்மேற்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.

இது (சக்தி புயல்), அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் சற்று நகர்ந்து, பிறகு, மேற்கு-தென்மேற்கே நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். இது 05-ஆம் தேதி வரை மேற்கு-தென்மேற்கே மேலும் நகர்ந்து, வடக்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

மழைக்கான எச்சரிக்கை:

04-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

05-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரிரு

06-10-2025 முதல் 09-10-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

நாளை (04-10-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போவது கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-34° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

04-10-2025 முதல் 07-10-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்:

03-10-2025: வடமேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திரா - ஒரிசா - மேற்கு வங்காகடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04-10-2025: வடமேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், வடக்கு ஆந்திரா - ஒரிசா மேற்கு வங்காகடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்
05-10-2025 முதல் 07-10-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ராமேஸ்வரம் - ஹூப்ளி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! ஆகஸ்ட் முழுவதும் சேவை நீட்டிப்பு!
ராமேஸ்வரம் - ஹூப்ளி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! ஆகஸ்ட் முழுவதும் சேவை நீட்டிப்பு!
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget