மேலும் அறிய

Schools Leave: புயல் ஓய்ந்தும் தொடர்ந்து வெளுத்துவாங்கும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி விடுமுறை?

மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மழை காரணமாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: 

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் வடக்கு கேரளா-கர்நாடகா கடற்கரையில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் மாண்டஸ் புயல் உருவாகி சனிக்கிழமை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதி கன மழை முதல் மிக கன மழை பெய்தது. புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் சின்னமாக வலுப்பெறும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புயலாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்ந்தால் மீண்டும் கன மழை பெய்யக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் சின்னமாக உருவாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,

13.12.2022 மற்றும் 14.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில     இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

15.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேநேரம், மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், இன்று இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

இன்று:  லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

14.12.2022 மற்றும் 15.12.2022: தென்கிழக்கு  மற்றும்  அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
Embed widget