மேலும் அறிய

TN Rain Alert : வங்கக்கடலில் உருவாகப்போகும் புயல்? இன்று தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...லேட்டஸ்ட் வானிலை அப்டேட்...!

தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில்,

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு

1. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

2. தமிழக கடலோரப்பகுதிகளின் மேல்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

3. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 6-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகளில் 7-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 8-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

20 மாவட்டங்களில் இன்று கனமழை

04.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

05.05.2023 முதல் 07.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

08.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை : 

06.05.2023 முதல் 08.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-4  டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  

சூளகிரி (கிருஷ்ணகிரி) 15, செய்யாறு (திருவண்ணாமலை) 12, திண்டிவனம் (விழுப்புரம்) 11, மணமேல்குடி (புதுக்கோட்டை), மிமிசல் (புதுக்கோட்டை), பெருங்களூர் (புதுக்கோட்டை) தலா 10, நந்தியார் (திருச்சி), கீழச்செருவை (கடலூர்), திருப்பத்தூர் (சிவகங்கை) தலா 9, கடலாடி (ராமநாதபுரம்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), சுத்தமல்லி அணை (அரியலூர்), திருவையாறு (தஞ்சாவூர்), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), சிவகங்கை, அதனக்கோட்டை (புதுக்கோட்டை), தலா 7, காரைக்குடி (சிவகங்கை), மானாமதுரை (சிவகங்கை), பரமக்குடி (ராமநாதபுரம்), புதுக்கோட்டை, தொண்டி (ராமநாதபுரம்), கேதர் (விழுப்புரம்), பேரையூர் (மதுரை), நகுடி (புதுக்கோட்டை), திருவாடானை (ராமநாதபுரம்), கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), வெம்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 6, திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), ஏழுமலை (மதுரை), புடலூர் (தஞ்சாவூர்), கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), சூரப்பட்டு (விழுப்புரம்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), கடவனூர் (கள்ளக்குறிச்சி), செட்டிகுளம் (பெரம்பலூர்), கேசிஎஸ் மில் கச்சிராயப்பாளையம் (கள்ளக்குறிச்சி), தொழுதூர் (கடலூர்), பென்னாகரம் (தருமபுரி), ஆயின்குடி (புதுக்கோட்டை), புள்ளம்பாடி (திருச்சி), ஆலங்குடி (புதுக்கோட்டை), எறையூர் (அரியலூர்) தலா 5, கள்ளக்குறிச்சி, கள்ளக்குடி (திருச்சி), தீர்த்தாண்டதானம் (இராமநாதபுரம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), கோடியக்கரை (நாகப்பட்டினம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), ராணிப்பேட்டை, ஆற்காடு (ராணிப்பேட்டை), தேவகோட்டை (சிவகங்கை), திருச்சுழி (விருதுநகர்), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), பாடலூர் (பெரம்பலூர்), உடையாளிபட்டி (புதுக்கோட்டை), கமுதி (ராமநாதபுரம்) தலா 4, லக்கூர் (கடலூர்), திருமானூர் (அரியலூர்), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), வேப்பூர் (கடலூர்), அரிமளம் (புதுக்கோட்டை), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), முகையூர் (விழுப்பேட்டை), திருமயம் (புதுக்கோட்டை), தென்பரநாடு (திருச்சி), விருதுநகர் AWS ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), ஓசூர் (கிருஷ்ணகிரி), அம்மூர் (ராணிப்பேட்டை), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), தாண்டாரம் (திருவண்ணாமலை), விருதுநகர், விளாத்திகுளம் (தூத்துக்குடி), மணம்பூண்டி (விழுப்புரம்), மலையூர் (புதுக்கோட்டை), பாலர் அணைக்கட்டு (இராணிப்பேட்டை), பெரம்பலூர், தஞ்சாவூர் PTO, கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), லால்குடி (திருச்சி), குருங்குளம் (தஞ்சாவூர்), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), பாப்பாரப்பட்டி KVK AWS (தருமபுரி), செந்துறை (அரியலூர்), காட்பாடி (வேலூர்), எறையூர் (பெரம்பலூர்), பொன்னமராவதி (புதுக்கோட்டை), தஞ்சாவூர், விருகாவூர் (கள்ளக்குறிச்சி), தேவிமங்கலம் (திருச்சி) தலா 3, ஆனைமடுவு அணை (சேலம்), கல்லிக்குடி (மதுரை), ராமநாடு KVK AWS (ராமநாதபுரம்), வந்தவாசி (திருவண்ணாமலை), கீரனூர் (புதுக்கோட்டை), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), வாலினோகம் (ராமநாதபுரம்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), சமயபுரம் (திருச்சி), இளையங்குடி (சிவகங்கை), ஆரணி (திருவண்ணாமலை), அருப்புக்கோட்டை (விருதுநகர்), மரக்காணம் (வில்லாபுரம்), வீரகனூர் (சேலம்), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), அம்முண்டி (வேலூர்), துவாக்குடி (திருச்சி), வி.களத்தூர் (பெரம்பலூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), கிருஷ்ணகிரி, செம்மேடு (விழுப்புரம்), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி),  மூங்கில்துறை (கள்ளக்குறிச்சி), தலைவாசல் (சேலம்), ராமநாதபுரம்  தலா 2, காரையூர் (புதுக்கோட்டை), சிங்கம்புணரி (சிவகங்கை), காட்டுமயிலூர் (கடலூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), வேதநத்தம் (தூத்துக்குடி), திருச்சி டவுன் (திருச்சி), வால்பாறை PTO  (கோயம்புத்தூர்), கிராண்ட் ஆனைகட் (தஞ்சாவூர்), காஞ்சிபுரம், பீளமேடு விமான நிலையம் (கோயம்புத்தூர்), கோவிலங்குளம் (விருதுநகர்), மீ மாத்தூர் (கடலூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), சோலையார் (கோயம்புத்தூர்), திருபாலபந்தல் (கள்ளக்குறிச்சி), செஞ்சி (விழுப்புரம்), கல்லந்திரி (மதுரை), வீரபாண்டி (தேனி), தனிமங்கலம் (மதுரை), வைகை அணை (தேனி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), கிண்ணக்கொரை (நீலகிரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), காரியாபட்டி (விருதுநகர்), பொன்னை அணை (வேலூர்), கரியக்கோவில் (சேலம்), மன்னார்குடி (திருவாரூர்), வல்லம் (தஞ்சாவூர்), பொன்மலை (திருச்சி), போளூர் (திருவண்ணாமலை), பணப்பாக்கம் (இராணிப்பேட்டை), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), திருப்புவனம் (சிவகங்கை), திருச்சி விமான நிலையம், பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), வல்லம் (விழுப்புரம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), சாத்தூர் (விருதுநகர்), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விராலிமலை (புதுக்கோட்டை), திருச்சி), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), கறம்பக்குடி (புதுக்கோட்டை), இலுப்பூர் (புதுக்கோட்டை), அன்னவாசல் (புதுக்கோட்டை), சோத்துப்பாறை (தேனி), வேலூர், மண்டபம்  (இராமநாதபுரம்), பேராவூரணி (தஞ்சாவூர்), புலிப்பட்டி (மதுரை), நத்தம் (திண்டுக்கல்), பாம்பன் (இராமநாதபுரம்), கோவில்பட்டி (திருச்சி), திருமங்கலம் (மதுரை), பையூர் AWS (கிருஷ்ணகிரி), மேலூர் (மதுரை), ஆத்தூர் (சேலம்), ஆனந்தபுரம் (விழுப்புரம்), திருவண்ணாமலை,  குப்பணம்பட்டி (மதுரை) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

04.05.2023:  குமரிக்கடல் பகுதிகள்,  கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

07.05.2023 முதல் 10.05.2023 வரை:   07.05.2023 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். காற்றின் வேகம் சற்றே உயர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்   08.05.2023 இரவிலிருந்து மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். காற்றின் வேகம் மேலும்  உயர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 10.05.2023 முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆழ் கடலிலுள்ள  மீனவர்கள் 07.05.2023 தேதிக்குள்  கரைக்கு திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Embed widget