TN Rain Alert: அடுத்த 3 மணி நேரத்திற்கு உஷார்.. சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இலேசான முதல் கனமழையானது கடந்த சில நாட்களாகவே பெய்து வருகிறது. இதனால் அணைகள் உட்பட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நீரின் அளவு உயர்ந்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 24, 2023
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ இன்று (நவம்பர் 24) காலை 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்” என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரு சில பகுதிகளில் அதிக மழை பெய்யலாம் என வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.எனவே தங்கள் பகுதியில் அதிக மழைப்பொழிவு இருந்தாலோ, பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி இருந்து வகுப்புகள் நடத்த உகந்த சூழல் இல்லாத நிலை ஏற்பட்டாலோ அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார், மேலும் இது தொடர்பாக கல்வி அலுவலரிடம் தொலைபேசியில் தெரிவித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய வானிலை நிலவரம்
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, “தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.