TN Power Shutdown: நாளை(03.11.25) நெல்லை முதல் கோவை வரை! எங்கெல்லாம் மின் வெட்டு! TANGEDCO அறிவிப்பு
TN Power Shutdown: மின்சார பராமரிப்பு பணிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் காரணமாக நாளை(03.11.2025) முக்கிய மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
நாளைய மின் தடை:
நீலகிரி மாவட்டம்:
ஒரசோலை, வெஸ்ட்புரூக், பாக்கியாநகர், கக்குச்சி, திருச்சிக்கடி, அஜ்ஜூர், கட்டபெட்டு, நடுஹட்டி, இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொரை, கூக்கல், கூக்கல்தொரை, தொரையட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு, சின்னகுன்னூர், அணிக்கொரை, டி.மணியட்டி, பில்லிக்கொம்பை, பையங்கி, கலிங்கனட்டி, மசக்கல்
திருப்பூர் மாவட்டம்:
உடுமலை பகுதி- தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சி.பொ.சாளை, பாண்டியன் கரடு, எரிசினம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர்
கோவை மாவட்டம்:
எம்ஜி புதுர், சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர்
திருநெல்வேலி மாவட்டம்:
தச்சநல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ்நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கியநகர், தெற்கு பாலபாக்கியநகர், மதுரை ரோடு, திலக்நகர், பாபுஜிநகர், சிவந்திநகர், கோமதிநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதயநகர் ஆகிய இடங்கள். மேலும், மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்






















