மேலும் அறிய

pneumococcal Vaccination For Children: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போடப்படும் நிமோகோக்கல் தடுப்பூசி - முழு விவரம்!

2 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். ஆனால் என்ன காரணத்தினால் எடப்பாடி அரசு செய்யவில்லை என்பது தெரியவில்லை.

நிமோனியா, மூளைக் காய்ச்சல் நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க நிமோகோக்கல் தடுப்பூசி போடும் பணியை சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் 5 வயதிற்குட்பட்ட 9 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் தடுப்பூசி போடப்படவுள்ளது. இந்நிகழ்வில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்தியாவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா,  மூளைக்காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களினால் 12 லட்சம் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகி பலியாகின்றனர். தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதற்கான தடுப்பூசியாக நிமோகோக்கல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் போடும் பணியினை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தோம். தினந்தோறும் எழும்பூர் குழந்தைகள் அரசு  மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படும்.  தனியார் மருத்துவமனைகளை பொறுத்தவரை மூன்று தவணைகளாக போடப்படும் தடுப்பூசி செலுத்துவதற்கு 12 ஆயிரம் வரை செலவாகும். அரசின் சார்பில் தடுப்பூசிகள் இலவசமாக போடும் திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளோம். எல்லா மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

pneumococcal Vaccination For Children: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போடப்படும் நிமோகோக்கல் தடுப்பூசி - முழு விவரம்!

5 வயதிற்குட்பட்ட 9 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி தடுப்பூசி போடப்படும். 2 ஆண்டுகளுக்கு முன்பு போட்டு இருக்க வேண்டும். ஆனால் என்ன காரணத்தினால் எடப்பாடி அரசு செய்யவில்லை என்பது தெரியவில்லை. 70 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. முதல் தவணை உள்ள குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் போடப்படும். 

தசை சிதைவு நோய் உள்ளவர்களுக்கு என்று சிகிச்சை அளிக்க சென்னையில் மருத்துவமனை உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த நோயினால்  2 ஆயிரம் குழந்தைகளும், சென்னையில் 200 குழந்தைகள் உள்ளனர். சென்னையில் உள்ள மருத்துவமனை ஆய்வு செய்யப்படும் தேவைப்பட்டால் அந்த மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார். அதற்கான அடிப்படை கட்டமைப்பினை துறை மேற்கொண்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 5 வயது பெண் குழந்தை பீளிச்சிங் பவுடர் சாப்பிட்டதால்  உடல் நலிவுற்று எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் குடல் சுருங்கி உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக குழந்தையின் வயிற்றில் துளையிட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

6 கிலோவில் இருந்த குழந்தையின் எடை 8 கிலோ அளவிற்கு உயர்ந்துள்ளது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக குழந்தை விரைவில் குணமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தையின் பெற்றோர்கள் தங்குவதற்காக  எனக்காக ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் உள்ள அறையில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

TN Vaccine Wastage: இருப்பை விட அதிக தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதலிடம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Embed widget