TN Local Body Election: ஒத்த ஓட்டு வாங்கிய பாஜக கார்த்தி... தெறிக்கவிடும் மீம்ஸ்!!
மீம்களூடன் #Single_Vote_BJP எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9 ஆவது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
திமுக சார்பில் அருள்ராஜ், அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், பாஜகவைச் சேர்ந்த கார்த்திக், தேமுதிகவைச்சேர்ந்த ரவிக்குமார் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதன்படி திமுக வேட்பாளர் கட்டில் சின்னத்திலும், அதிமுக வேட்பாளர் சங்கு சின்னத்திலும், பாஜக வேட்பாளர் கார் சின்னத்திலும், தேமுதிக வேட்பாளர் பெயிண்டிங் பிரஸ் சின்னத்திலும் போட்டியிட்டனர். மொத்தம் சுயேட்சைகள் உட்பட மொத்தம் 6 வேட்பாளர்கள் அப்பதவிக்கு போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே திமுக சார்பில் போட்டியிட்ட அருள்ராஜ் முன்னிலை வகித்து வந்தார். அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளை பெற்றார். பாஜகவின் கார்த்திக் 1 வாக்கையும், தேமுதிக ரவிக்குமார் 2 வாக்குகளையும் பெற்றுள்ளனர். பாஜக கார்த்திக், அக்கட்சியின் இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ளார்.
“கார்த்திக் உள்பட அவர் குடும்பத்தில் மொத்தம் 6 பேர் உள்ளனர். அவர் சார்ந்த கட்சியினர் வாக்களிக்கவில்லை என்றாலும், அவரது குடும்பத்தினராவது வாக்களித்திருந்தாலே இதைவிட அதிகம் வாக்கு வாங்கியிருக்க முடியும். குடும்பத்தினர் கூட அவரை ஆதரிக்கவில்லை. அந்த ஒரு ஓட்டும் அவர் போட்டது தானா? அல்லது வேறு யாரேனும் போட்டனரா என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. #ஒத்த_ஓட்டு_பாஜக ஹேஷ்டேக் மற்றும் இது தொடர்பான மீம்களும் ட்ரெண்டாகியுள்ளன. ஆனால் தான் குடும்பத்துடன் வசிக்கும் வார்டு வேறு எனவும், போட்டியிட்ட வார்டு வேறு எனவும் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஆனாலும் மீம்ஸ்கள் சோஷியல் மீடியாவில் பறக்கின்றன.
பெட்ரோல் விலை அதிகரித்து வரும் சூழலில்
#ஒத்த_ஓட்டு_பாஜக petrol 102.50 rs gas 915 rs but after hearing this news😂😂😂🤣🤣proud Coimbatorian pic.twitter.com/sVdo1f9jJq
— பிரசாந்த்(Prasanth) (@Prasanthtweet_) October 12, 2021
அந்த ஒத்த ஓட்டை வாங்கிய பிறகு,
After getting that one vote , that candidate be like #ஒத்த_ஓட்டு_பாஜக pic.twitter.com/NAkRntz3m0
— தமிழன் பிரபாகரன் (@sunilprabakarc) October 12, 2021
அப்பா, அம்மா வாக்கு கூட இல்லை
Better to dissolve TN BJP 😂#Single_Vote_BJP #ஒத்த_ஓட்டு_பாஜக pic.twitter.com/Yq6nVLUdLr
— சிவசங்கரன் சுந்தரராஜன் (@hTaB3xmOd0qV9tR) October 12, 2021
தனித்து நிற்கும் தமிழ்நாடு
#ஒத்த_ஓட்டு_பாஜக well this is how tamilnadu treat BJP pic.twitter.com/e1N4R7bwQI
— பிரசாந்த்(Prasanth) (@Prasanthtweet_) October 12, 2021
TN BJP President: we will send 100 BJP workers to each booth to defeat DMK
— Sami (@SAMI_hadyh) October 12, 2021
And today, BJP's district secretary gets only one vote in the rural body elections.
First get voters, then send workers to booth 😂😂😂#Single_Vote_BJP #ஒத்த_ஓட்டு_பாஜக pic.twitter.com/eWHNfnByhs
என இதுபோன்ற மீம்களூடன் #Single_Vote_BJP ட்ரெண்டிங்கில் உள்ளது