TN Govt AC Bus: 1ஆம் தேதி முதல் அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றி, அரசு போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த 702 குளிர்சாதன பேருந்துகள் அக்டோபர் 1ம் தேதி முதல் இயக்கப்படும்
முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றி, அரசு போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த 702 குளிர்சாதன பேருந்துகள் அக்டோபர் 1ம் தேதி முதல் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்துக் கழகம் இணை இயக்குநர் ( மக்கள் தொடர்பு) வெளியிட்ட செய்திக் குறிப்பில்," கடந்த மே மாதம் 10ம் தேதியில் இருந்து மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்குகிடையே இயக்கப்படாமல் இருந்து வந்த குளிர்சாதன பேருந்துகள் நோய்த் தொற்றுப் பரவல் குறைந்து வருவதையடுத்து இயக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் அனுமதியளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு போக்குவரத்துக் கழகங்கள் வாரியாக குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னை அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் வாரியாக 340 குளிர்சாதன பேருந்துகளும், விழுப்புரம் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் வாரியாக 92 குளிர்சாதன பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
பராமரிப்பு பணிகளை செம்மையாக மேற்கொண்டு பேருந்தில் தொற்று பரவா வண்ணம் மருந்துகள் தெளித்து செய்யப்பட்டு 01.10.2021 முதல் இயக்கப்படவுள்ளது. எனவே, பயணிகள் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TN Govt AC Bus: 1ஆம் தேதி முதல் அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு#ACBus #coronavirus #COVID19 #setc https://t.co/HPTmwrmkxp
— ABP Nadu (@abpnadu) September 24, 2021
பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்துப் பேருந்துகளிலும் சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்த பிறகுதான் பயணிகள் பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சானிடைசர் பயணிகளுக்கு நடத்துநர் மூலம் அளிக்க நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு தக்க நெறிமுறை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வாசிக்க:
சென்னை ,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய செய்திகள்..!
PM CARES | பி.எம். கேர்ஸ் நிதி இந்திய அரசுக்கு சொந்தமானது இல்லை: மத்திய அரசு தெரிவித்தது என்ன?
கண்ணகி- முருகேசன் தம்பதி ஆணவக் கொலை வழக்கு: 13 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
மதுரையில் சிக்னல்களில் பிச்சை எடுத்த 20 குழந்தைகள் மீட்பு - பிச்சை எடுக்க வைத்த நபர்களிடம் விசாரணை