'Made In Tamilnadu' உலகம் முழுவதும் ஒலிக்கவேண்டும் - முதல்வர் ஸ்டாலின்
2,120.54 கோடி மதிப்பீட்டில் 41,695 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 24 தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகம் பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு குழுக்களின் மூலம், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வணிக மற்றும் வர்த்தக வார விழாவை விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்து வருகிறது
இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
இந்த, மாநாட்டில், ரூ.2,120.54 கோடி மதிப்பீட்டில் 41,695 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 24 தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள், தமிழக அரசின் தலைமை செயலாளர், கூடுதல் செயலாளர் வணிகம் மற்றும் தொழில்கள் அமைச்சகம் (இந்திய அரசு), முதன்மை செயலாளர் தொழில்கள் (தமிழ்நாடு அரசு), வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குனர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்பார்கள்.
தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை வெளியீடு:
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில்,2030ம் வருடத்திற்குள் 100 மில்லியன் அமெரிக்க டாலராக ஏற்றுமதியை உயர்த்திட இலக்கு. இதற்காக ஏற்றுமதியை மேம்படுத்துதல், மற்றும் ஏற்றுமதி பன்முகப்படுத்துதல் என்ற இரு அணுகுமுறைகள் கடைபிடிக்கப்படும். மாநிலம் முழுவதும் பரவலாக ஏற்றுமதி மேற்கொள்ளும் வகையில், மாநல்லூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு இடங்களில், பொருளாதார வேலைவாய்ப்புப் பகுதிகள் உருவாக்கப்படும்.
ஏற்றுமதி அதிகமாக மேற்கொள்ளும் பகுதிகளில், ஏற்றுமதி தொடர்பான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தப்படும். இதற்காக, மாநிலத்தில் 10 ஏற்றுமதி பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு ஏற்றுமதி மையத்துக்கு தலா 10 கோடி ரூபாய் என்ற அளவில் 25% மானியம் வழங்கப்படும். மேலும், ஏற்றுமதியாளர்கள் மதிப்புக் கூட்டல் பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, தொகுப்பு சலுகைகள் வழங்க திட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தொழில்களின் வளர்ச்சியை மையமாகக் கொண்டும், ஏற்றுமதியில் மாநிலப் பங்கை கணிசமாக அதிகரிப்பதை இலக்காகக் கொண்டும், தமிழகத்தின் ஏற்றுமதி திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது.] மேலும், இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாட்டில் முதல் முறையாக Cotton Corporation of india மூலம் பஞ்சுக் கிடங்குகள் அமைத்திட ஆணை வழங்கப்பட்டது.