CM Stalin On Bihar Election: ”பீகார் தேர்தல் ஒரு பாடம், தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி” சி.எம்., ஸ்டாலின் எச்சரிக்கை
CM Stalin On Bihar Election: பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் ஒரு பாடம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

CM Stalin On Bihar Election: பீகார் சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து:
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மூத்த அரசியல் தலைவர் நிதிஷ்குமாரின் தீர்க்கமான வெற்றிக்கு எனது வாழ்த்துகள். பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவருக்கு நல்வாழ்த்துக்கள். இளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் அயராத பரப்புரைக்கும் என வாழ்த்துகள், தேர்தல் முடிவுகள் மக்கள் நலத்திட்டங்கள், சமூக மற்றும் சித்தாந்த கூட்டணிகள், தெளிவான அரசியல் செய்தி மற்றும் கடைசி வாக்குப்பதிவு வரை அர்ப்பணிப்புள்ள மேலாண்மை ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. INDIA கூட்டணியின் தலைவர்கள் சூழலை உணர்ந்து வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள மூலோபாய ரீதியாக திட்டமிடும் திறன் கொண்ட அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள்.
தேர்தல் ஆணையத்தின் மீது அதிருப்தி
இந்தத் தேர்தலின் முடிவு இந்திய தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்களையும் பொறுப்பற்ற செயல்களையும் மூடிமறைக்கவில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் நற்பெயர் அதன் மிகக் குறைந்த கட்டத்தில் உள்ளது. இந்த நாட்டின் குடிமக்கள் ஒரு வலுவான மற்றும் பாரபட்சமற்ற தேர்தல் ஆணையத்திற்கு தகுதியானவர்கள், அதன் நடவடிக்கைகள் வெற்றி பெறாதவர்களிடையே கூட நம்பிக்கையைத் தூண்ட வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
#BiharElection2025: Lessons for everyone
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 15, 2025
I congratulate veteran leader Thiru. @NitishKumar for his decisive victory and wish him well in fulfilling the expectations of the people of #Bihar. I also appreciate young leader Thiru. @yadavtejashwi for his tireless campaign.
Election…
தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு
பீகார் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில், பாஜக மற்றும் நிதிஷ்குமாரின் கூட்டணி 202 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதேநேரத்தில், தேர்தலுக்கு முன்பு மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியலில், பாஜகவிற்கு எதிரான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாகவும், செயல்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபோக நாடாளுமன்ற மற்றும் ஹரியான சட்டமன்ற தேர்தலின்போதும், பாஜகவிற்கு ஆதரவாக போலி வாக்காளர்களை சேர்த்ததாகவும் தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.
இந்நிலையில் தான், பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கும் விதமாக இல்லை என, முதலமைச்சர் ஸ்டாலினும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.





















