Annamalai: CMDA அப்ரூவல் வழங்குவதில் சில நிறுவனங்களுக்கு, ஆதரவாக செயல்படுவது ஏன்?- கேள்வி எழுப்பிய அண்ணாமலை
சிஎம்டிஏ அப்ரூவல் வழங்குவதில் ஒரு சில நிறுவனங்களுக்கு விரைவாக கொடுக்கப்படுகிறது என்று பாஜக தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் கட்டட ஒப்பந்தங்களுக்கு அப்ரூவல் அளிக்கும் பணிகளில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதாவது ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே விரைவாக அப்ரூவல் அளிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர், “ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டுமே வேகமாக அப்ரூவல் அனுமதி கொடுப்பது எப்படி? அதிலும் குறிப்பாக அந்த நிறுவனங்களுக்கு மட்டுமே சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி உள்ளிட்ட அப்ரூவல் விரைவாக கிடைக்கிறது. மற்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் ஜிஸ்கோயர் நிறுவனம் போன்ற சில நிறுவனங்களுக்கு 6 முதல் 7 நாட்களில் அனுமதி வழங்கப்படுகிறது. இப்படி குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே எப்படி விரைவாக அனுமதி வழங்கப்படுகிறது என்பதை தமிழ்நாடு அரசு தெளிவாக விளக்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு:
முன்னதாக அண்ணாமலை,”அம்மா நியூட்ரிசியன் கிட்டில் உள்ள ஹெல்த் மிக்ஸ் வாங்குவதில் தமிழ்நாடு அரசு 45 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக இந்த நியூட்ரிசியன் கிட்டில் வரும் ஹெல்த் மிக்ஸில் மார்ச் மாதம் 31ஆம் தேதி ஆவின் ஹெல்த் மிக்ஸ் சேர்க்க வேண்டும் என்று வல்லுநர் குழு தெரிவித்திருந்தது. அதன்பின்னர் ஏப்ரல் 8-ஆம் தேதி மீண்டும் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு ஆவின் நிறுவனத்தின் ஹெல்த் மிக்ஸ் பயன்பாட்டிற்கு பதிலாக ப்ரோ பிஎல் நிறுவனத்தின் ஹெல்த் மிக்ஸ் மீண்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்து டெண்டர் விடுவதற்கு முன்பாக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் இதே நியூட்ரிசியன் கிட்டில் வழங்கப்படும் இரும்பு சத்து டானிக் வாங்குவதிலும் சுமார் 32 கோடி ரூபாய் நஷ்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாடு அரசு பொங்கல் பை வழங்கிய போது அதிலும் இதே அனிதா டெக்ஸ்காட் நிறுவனம் சார்பில் தான் பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த தொகுப்பிலும் சில முறைகேடுகள் நடத்தப்பட்டிருந்தது. தற்போது அதே நிறுவனத்திற்கு மீண்டும் இந்த பொருட்கள் வழங்குவதற்கும் டெண்டர் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தமிழ்நாடு அரசு முறையான விளக்கத்தை அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்