மேலும் அறிய

MK Stalin Assembly Speech: மாநில சுயாட்சியும் திராவிடக் கொள்கைதான்.. நீட் தேர்வல்ல.. பலிபீடம் - முதலமைச்சர் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

சட்டப்பேரவையில் முதல்வர் பேசும்போது, “1920 ஆம் ஆண்டு நடந்த முதல் பொது தேர்தலில் தலைமகனான நீதிக்கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது இந்தியாவின் நிர்வாக நெறிமுறைப்படி சட்டத்துனுடைய ஆட்சி நடப்பதாக எழுதி வைத்துள்ளனர். அப்படி உருவாக்கப்பட்ட மாமன்றத்தில் இந்த நாள் என்பது மிக முக்கியமான நாள். நாம் இன்று நீட் தேர்வு குறித்து விவாதிப்பதற்கு மட்டும் கூட வில்லை. 

தமிழ் நாடு சட்டமன்றத்தின்  இறையாண்மையை உரிமையை காப்பதற்காகவும் நாம் இன்று கூடியிருக்கிறோம். கூட்டாட்சி தத்துவம் காப்பற்றப்படுவதற்காக நாம் இன்று கூடியிருக்கிறோம். 16 வயதில் அரசியல் களத்தினுள் நான் நுழைந்தேன். என்னுடைய பொது வாழ்கையில் மறக்க முடியாத நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவகல்வியில் 7.5 % இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல இட ஒதுக்கீடுகள் இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

2010 ஆம் ஆண்டு நீட் தேர்வு முன் மொழியப்பட்ட போதே, கலைஞர் அதனை கடுமையாக எதிர்த்தார். அன்றைய காலத்தில் நீட் தேர்விற்கு எதிராக, 115 வழக்குகள் இந்தத் தேர்விற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த தேர்வு முறை அரசியலைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு சாதகமானதுதான். அவர்களுக்குத்தான் இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கிறது. அவ்வளவு பணம் கொடுத்து பயிற்சி பெற முடியாதவர்களுக்குத்தான் நாம் நீட் விலக்கு கேட்கிறோம். 

2019 ஆம் ஆண்டு 4 பேரும், 2020 ஆம் ஆண்டு 5 பேரும் நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 15 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக மக்களவையில் ஒன்றிய அரசே கூறியுள்ளது. இது தொடர்பாக தற்போது வரை 12 வரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது மக்களிடம் கருத்து கேட்டு 193 பக்க அறி அறிக்கையை சமர்பித்தது. நீண்ட பரிசீலனைக்கு பிறகு, நீட் விலக்கு மசோதா இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த நீட் விலக்கு மசோதாவை ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் 142 நாட்கள் அதை வைத்திருந்து விட்டு, நமக்கே அதை திருப்பி வந்திருக்கிறது. 

அதற்காக அவர் சொன்ன காரணங்கள் சரியானவை அல்ல. அறிக்கையானது ஊகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு என்பது ஒரு பலி பீடம் போன்றது. கறுப்பாக இருப்பவர்கள் உள்ளே வரக்கூடாது என்று சொல்வது எப்படி பாகுபாடோ, அதே போல மாநில கல்வித்திட்டத்தில் இருந்து வினாக்களை எடுக்காததும் பாகுபாடுதான். 2, 3 ஆண்டுகள் பணம் செலுத்தி பயிற்சி பெற முடிந்தவர்கள் மட்டுமே நீட்  தேர்வில் நுழைய முடியும் என்பது 21 ஆம் நூற்றாண்டின் மாபெரும் அறிவு தீண்டாமை. நீட் தேர்வு பணக்கார நீதியைம் பேசுகிறது. அதனால் மீண்டும் நிறைவேற்றப்படும் இந்த நீட் விலக்கு மசோதவை ஆளுநர் காலம் தாழ்த்தாமல் குடியரசு தலைவருக்கு அனுப்புவார் என்று நம்புகிறேன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget