TN Assembly Session: சட்டமன்ற தலைவர் அரசியல் ரீதியாக செயல்படுகிறார்... சபாநாயகர் முடிவு குறித்து ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!
சட்டமன்ற தலைவர் அரசியல் ரீதியாக செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சட்டமன்ற தலைவர் அரசியல் ரீதியாக செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தொடங்கிய சில நொடிகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்.எல்.ஏக்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, இன்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு அ.தி.மு..க. எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை ஒரு மனதாக தேர்ந்தெடுத்து சபாநாயகரிடம் கடிதமாக ஒப்படைத்தோம்.
View this post on Instagram
நாங்கள் கொடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்காமல், ஏற்கனவே துணை தலைவராக இருந்தவரை தொடர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த இருக்கையில் அமர வைத்து இருக்கிறார்கள்.
நியாயமாக, நடுநிலையோடு செயல்படக்கூடிய செயலை செய்யாமல், சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுவதாக பார்க்கிறோம். திமுக தலைவர் ஆலோசனைபடியே சபாநாயகர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம். அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக தலைவர் சட்டமன்ற சபாநாயகர் மூலமாக எங்களை பழிவாங்க நினைக்கிறார். சட்டமன்றம் என்பது வேறு, கட்சி என்பது வேறு, ஒரு சட்டமன்றத்திலே அதிமான சட்டமன்ற உறுப்பினர்கள் யாரை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதுதான் நடைமுறை.
அதேபோல், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும், எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும், அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள் அந்த பதவி வகிப்பதே அது மரபு. அந்த மரபு, மாண்பு நிராகரிக்கப்பட்டுள்ளது சட்டப்பேரவையில். இதைதான் நாங்கள் நீதிக்கேட்டோம்.
View this post on Instagram
என்னுடைய மூத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் இதுகுறித்து இன்று காலை 9.15 மணியளவில் சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்திற்கு சென்று எங்களுடைய கருத்துகளை நியாயமாக தெரிவித்தோம். அதன் அடிப்படையில் என்னுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை தலைவர், துணை செயலாளர்களை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
ஆனால் அவர் எங்களுக்கு முறையான பதிலை தெரிவிக்கவில்லை. அதற்கு மாறாக அவர் சட்டமன்றத்தில் கருத்து தெரிவிக்கின்றார். அதுமட்டுமின்றி, பேரவை தலைவர் எழுந்து கேள்வி நேரம் முடிந்து நீங்கள் செல்லலாம் என்றார்.” என தெரிவித்திருந்தார்.