MK Stalin Speech: தமிழ்நாடு வரும் ஈழத்தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
பொதுபட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு.
இலங்கையில் இருந்து தமிழ்நாடு வரும் ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவில் விடிவுகாலம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இலங்கையில் பரிதவித்துக் கொண்டிருக்கிற தமிழர்கள் தமிழ்நாடு வந்துகொண்டிருக்கிறார்கள். அபயம் தேடி வரும் இலங்கை தமிழர்களை பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இலங்கையில் இருந்து தமிழ்நாடு வரும் தமிழர்களுக்க்கு தமிழ்நாடு அரசு விரைவில் விடிவு காலம் ஏற்படுத்தி கொடுக்கும்.ஈழத்தமிழர்கள் விவகாரத்தை சட்டரீதியாக கையாளுவது குறித்து மத்திய அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
மேலும், பொதுபட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். கடந்த வெள்ளிக்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் மொத்தம் 6 நாட்கள் அலுவல்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்