மேலும் அறிய

CM Stalin: குடிநீரில் மனிதக் கழிவைக் கலந்தது கண்டிக்கத்தக்கது- சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்றது. சட்டப்பேரவையின் மூன்றாவது நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் பேரவையில் பேசி வருகிறார். 

முதல்வர் பேசியதாவது:

’’புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை போட்டு அசுத்தம் செய்தது தொடர்பாக இங்கே பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி, இந்த அரசினுடைய கவனத்திற்குக் கொண்டுவந்து உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென்று ஒட்டுமொத்தமாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

“எல்லோருக்கும் எல்லாம்” என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் சமூகநீதி.  அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும், வாய்ப்புகளும் அமைய வேண்டும் என்ற எண்ணம்தான் சமூகநீதி.  அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதி செய்வதன் மூலமாகத்தான் அத்தகைய சமூக நீதியை நாம் வழங்கிட முடியும். அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் சமூகநீதி என்னும் அசைக்க முடியாத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதை, உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். 

சாதியப் பாகுபாடு சார்ந்த தீண்டாமை இன்னும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதை, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்வு உண்மையிலேயே வருத்தத்திற்குரியது; கண்டனத்திற்குரியது; கண்டிக்கத்தக்கது.

நேரடி கள ஆய்வு 

வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளது தொடர்பான தகவல் எனக்குக் கிடைத்தவுடனே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்திடவும், பாதுகாப்பான குடிநீர் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் அறிவுறுத்தியதன் அடிப்படையில், கடந்த 27-12-2022 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அலுவலர்கள் அக்குடியிருப்புப் பகுதிக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.  அவர்கள் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக மேற்கொண்டு வருகின்றனர் என்பதை இந்த அவையிலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.   

வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். மேலும், அந்த கிராமத்திலிருந்து இதுபோன்ற நோய்த் தொற்றுடைய நோயாளிகள் வருகை அதிகரித்த நிலையில், அவர்கள் பயன்படுத்தி வரும் குடிநீரைப் பரிசோதனை செய்திட மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதனடிப்படையில், வேங்கைவயல் கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை ஆய்வு செய்தபோது, மனிதக் கழிவுகள் கலந்துள்ளது தெரிய வந்தது.  

அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் குழு வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று 26-12-2022 முதல் இன்று வரையில் அந்தக் கிராமத்திலேயே முகாமிட்டு நோய்த் தடுப்புப் பணிகளையும், மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது அந்தக் கிராமத்தில் பொது சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில், ஒரு மருத்துவ அலுவலர், 3 செவிலியர், 2 மருத்துவமனைப் பணியாளர்கள், 3 சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 10 பணியாளர்கள் அடங்கிய குழுவினர் பணியாற்றி வருகிறார்கள்.

தொட்டிகள் சுத்தம்

அதோடு மட்டுமல்லாமல், உள்ளாட்சி அமைப்பின் உதவியோடு, அந்த கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறு மின்விசைத் தொட்டி ஆகியவை சுத்தம் செய்யப்பட்டதோடு, அனைத்து குடிநீர் வழங்கு குழாய்களும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, அதன்மூலமாக நீரேற்றப்பட்டு, நீர்மாதிரி சேகரிக்கப்பட்டு, அறந்தாங்கி பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், தற்போது குடிநீர் சுத்தமாக உள்ளது என அறிக்கை வரப்பெற்றுள்ளது. 

இந்த சூழ்நிலையில், அந்த கிராமத்திலுள்ள 32 வீடுகளுக்கும் 2 லட்சம் ரூபாய் செலவில் முற்றிலும் புதிய இணைப்புக் குழாய்கள் மற்றும் குடிநீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டு, 5-1-2023 முதல் சீரான குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. அதோடு, அங்கு ஒரு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 7 லட்சம் ரூபாய் செலவில் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அங்கு தற்போது தினசரி டேங்கர் லாரி மூலம் சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் காலையும், மாலையும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 

வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை

இச்சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரையில் 70 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இச்சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் எவ்வளவுதான் பொருளாதாரத்திலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகள் சமூக வளர்ச்சியில், ஒற்றுமையில் அவ்வப்போது தடைக்கற்களாக அமைந்து விடுகின்றன. சமூகத்தில் உள்ள இன்னும் சில பகுதிகளில் காணப்படும் சாதி மத வேறுபாடுகளே இதற்குக் காரணம் என்பதை உணர்ந்து, ‘மதம் உன்னை மிருகமாக்கும் – சாதி உன்னை சாக்கடையாக்கும்’  என்ற பகுத்தறிவுச் சுடர் தந்தை பெரியாரின் வார்த்தைகளை மனதிலே கொண்டு, நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும்.

ஆனால், சாதி, மதங்களைத் தூக்கிப் பிடித்து, பிரிவினையை ஏற்படுத்தி வரும் சில சமூக விரோதிகள் இன்னும் இந்த நாட்டிலே இருக்கின்றார்கள் என்பதையும் நாம் நினைவிலே கொள்ளவேண்டும்.  இவர்களையெல்லாம் தாண்டி, சாதி, இன, மத வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து, நாம் அனைவரும் சம உரிமை கொண்ட மனிதர்கள் என்ற உணர்வோடும், மனிதநேயத்தோடும் விளங்கிடவேண்டும். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை இரும்புக் கரம் கொண்டு எடுக்கப்படும்’’.

புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவம் குறித்த தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்த முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு கைதி எண் ஒதுக்கீடு.! எந்த எண் ஒதுக்கீடு?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு கைதி எண் ஒதுக்கீடு.! எந்த எண் ஒதுக்கீடு?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Embed widget