TN Agriculture Budget 202: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் காணிக்கை - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
உணவு தன்னிறைவை தமிழ்நாடு ஓரளவு எட்டிவிட்டது. தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பை 60 சதவீதம் என்பதை 75 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
2021-22ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் உரையாற்றி வருகிறார்.
அந்த உரையில், “வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன். வேளாண் வணிகர்கள் கோரிக்கையை கேட்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் வெளியிடுவது என்பது தொலைநோக்கு திட்டமாகும். உணவு தன்னிறைவை தமிழ்நாடு ஓரளவு எட்டிவிட்டது. தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பை 60 சதவீதம் என்பதை 75 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் சாகுபடி பரப்பை 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணைமுறையை தமிழ்நாட்டில் ஊக்குவிக்கப்படும். மாநிலம் முழுவதும் சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுப்படுத்தப்படும்.
#TNAgriBudgetWithABPNadu| வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்#TNAgriBudget2021 | #TNAgriBudget | #TNBudget2021 | #TNBudget | #TNAssembly | #MRKPaneerselvam | #MKStalin | #DMK pic.twitter.com/BJ2xgJiWEb
— ABP Nadu (@abpnadu) August 14, 2021
கலைஞர் அனைத்து கிராம வேளாண் ஒருங்கிணைப்பு திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும். உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டில் 125 மெட்ரிக் டன் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகப்பதற்காக 36 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் மரக்கன்றுகளும் முழு மானியத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பழங்குடியினர் விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களுக்கென பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும். அண்ணா பண்ணை மேம்பாடு திட்டம் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அண்ணா பன்முக வேளாண் செயல் விளக்க விதைப்பண்ணையாக மேம்படுத்தப்படும். வேளாண் தோட்டக்கலை பயிற்களில் பாரம்பரிய நவீன வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்கும் வகையில் செயல் விளக்கத்திடல்கள் அமைக்கப்படும். தோட்டக்கலை துறையின் மூலம் தோடக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும். இத்திட்டம் 21 கோடியே 80 லட்சம் செலவில் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
#TNAgriBudgetWithABPNadu| கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ரூ.250 கோடியில் செயல்படுத்தப்படும் - வேளாண் பட்ஜெட்டில் தகவல்#TNAgriBudget2021 | #TNAgriBudget | #TNBudget2021 | #TNBudget | #TNAssembly | #MRKPaneerselvam | #MKStalin | @MRKPaneerselvam pic.twitter.com/SEKDJU0dXE
— ABP Nadu (@abpnadu) August 14, 2021
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கேற்ப சிறுகுறு விவசாயிகளின் வாழ்வாதாதத்தை மேம்படுத்த கூட்டுப்பண்ணைய திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். நடப்பு ஆண்டில் 1.10 லட்சம் விவசாயிகளை ஒருங்கிணைத்து, 1100 உழவு உற்பத்தியாளர்கள் குழுக்கள் அமைத்து வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ஒரு குழுவிற்கு ரூ.5 லட்சம் வீதம் மூலதன நிதி வழங்கப்படும். விவசாய விளைபொருள்களை அருகில் உள்ள பெரு நகர சந்தைகளுக்கு எடுத்துச் சென்று லாபகரமாக சந்தைப்படுத்துவதற்கு சிறிய இலகுரக சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கு திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டம் 59 கோடியே 55 லட்சம் செலவில் மாநில அரசின் நிதி ஒதுக்கப்படும்” என்று கூறினார்.