அதிகாலையில் சோகம்! திருப்பூரில் லாரி மீது கார் மோதி விபத்து - போலீஸ் உட்பட 6 பேர் உயிரிழப்பு
பணியில் இருந்த காவலர் ரவிச்சந்திரன் மற்றும் காரில் பயணம் செய்த 5 பேர் என மொத்தம் 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த குறுக்குத்தி பகுதியில் காவல் துறை சோதனைச் சாவடி (Check Post) அமைந்துள்ளது. இன்று அதிகாலை இந்தச் சோதனைச் சாவடியில் வெள்ளகோவில் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ரவிச்சந்திரன் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று விபத்தில் சிக்கி கவிழ்ந்ததாக சொல்லபடுகிறது, இதனால் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவலர் ரவிச்சந்திரன் ஈடுப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக, அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த கார் மற்றும் காவலர் ரவிச்சந்திரன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தின் கோரத்தாண்டவத்தில், பணியில் இருந்த காவலர் ரவிச்சந்திரன் மற்றும் காரில் பயணம் செய்த 5 பேர் என மொத்தம் 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான கார் லாரிக்கு அடியில் சிக்கி முழுவதுமாக சிதைந்து போனது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கார் ஓட்டுநரின் கவனக்குறைவு அல்லது தூக்க கலக்கம் காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரே விபத்தில் உயிரிழந்தது காவல் துறையினர் இடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்























