Tirunelveli Rain: சாப்பாடு இல்லையா! வெள்ளத்தில் சிக்கிய நெல்லை மக்களை தேடி வரும் தன்னார்வலர்கள் - உதவி எண்கள் அறிவிப்பு!
வெள்ளதில் சிக்கி உணவின்றி தவித்து வரும் நெல்லை மக்களுக்கு தன்னாவலர்கள் உதவி எண்களை அறிவித்துள்ளனர்
தென்மாவட்டங்களில் கனமழை:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டிஅதிக கனமழை பெய்து வருகிறது.
இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி மறுகால் பாய்கிறது. மேலும் அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. எங்கு திரும்பினாலும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவு போல காட்சியளிப்பதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், கடைகள் என அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. இதனால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உணவின்றி தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. நான்கு மாவட்டங்களில் சுமார் 7,434 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணிகள் தீவிரம்:
கடந்த 24 மணி நேரத்தில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 94.6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. திருச்செந்தூரில் 68.9 செ.மீ, ஸ்ரீவைகுண்டத்தில் 62.1 செ.மீ, கோவில்பட்டியில் 52.5 செ.மீ, சாத்தான்குளத்தில் 47.1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. காயல்பட்டினத்தில் ஓராண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித்தீர்த்ததுள்ளது. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 61.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 81485 39914 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம். மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் மக்கள் தொடர்பு கொள்ள எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலிக்கு 1077, 0462 2501012 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 1077, 0461 2340101 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்களின் உதவி எண்கள்:
இந்த நிலையில், வெள்ளதில் சிக்கி உணவின்றி தவித்து வரும் நெல்லை மக்களுக்கு தன்னாவலர்கள் உதவி எண்களை அறிவித்துள்ளனர். அதன்படி,
படகு மீட்பு குழு - 9841103050
பாளையங்கோட்டை - 95663 06614
தியாகராஜ நகர் - 9688106464
பொதிகை நகர் - 9342242098
ஜக்ஷன் & சிந்துபுந்துரை- 6379303644
தச்சநல்லூர் - 78718 09805
என்ஜிஓ காலனி - 9790761940
மேலப்பாளையம் - 9787005007
பாளையங்கோட்டை - 9787005007
கடயநல்லூர் - 997415009
புலியங்குடி - 8072897011, 9865154832, 9944168205
செங்கோட்டை - 9842050218; 8124812737; 9842516713
சங்கரன்கோவில் - 9659824380
சுரண்டை - 8870704541
பொட்டல் புதூர் - 9677475363
சங்கரன்கோவில் - 9659824380
மீனாட்சிபுரம் - 78718 09805
மேற்கண்ட எண்களை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும் மழை தொடரும்:
தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க