மேலும் அறிய

என் மீது புகார் அளிக்காதவர்கள் யார்? காயத்ரி ரகுராம் விதிவிலக்கா? - ஆக்ரோஷமான அண்ணாமலை..

கட்சியிலிருந்து யார் விலகினாலும் புகழ்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. கட்சியை விட்டு விலகினாலும் அவரது வாழ்க்கை நன்றாக இருக்கட்டும் என அண்ணாமலை காய்த்ரி ரகுராமிற்கு பதிலளித்துள்ளார்.

கட்சியிலிருந்து யார் விளகினாலும் புகழ்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. கட்சியை விட்டு விளகினாலும் அவரது வாழ்க்கை நன்றாக இருக்கட்டும் என அண்ணாமலை காய்த்ரி ரகுராமிற்கு பதிலளித்துள்ளார். 

நேற்று காயத்ரி ரகுராம் பா.ஜ.க கட்சியிலிருந்து விலகுவதாக கூறி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவில் ”பெண்களுக்கான விசாரணை, சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காததற்காக தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த மனதுடன் எடுத்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் ஒரு வெளிநபரை போன்று விமர்சிக்கப்படுவதை நன்றாக உணர்கிறேன்.  கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. உண்மையாக உழைப்பவர்களை விரட்டுவது மட்டுமே அண்ணாமலையின் ஒரே குறிக்கோள். பாஜகவுக்கு எனது நல்வாழ்த்துகள். மோடி ஜி நீங்கள் சிறந்த நபர், நீங்கள் தேசத்தின் தந்தை, நீங்கள் எப்போதும் என் விஸ்வகுரு மற்றும் சிறந்த தலைவர். அமித்ஷா ஜி நீங்கள் எப்போதும் என் சாணக்கிய குருவாக இருப்பீர்கள்” என குறிப்பிட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் காயத்ரி ரகுராம் டேக் செய்திருந்தார். 

அவசர கதியில் நான் எடுத்த இந்த முடிவுக்கான பெருமை அண்ணாமலையையே சேரும். அவரை பற்றி நான் குறைவாகவே சிந்திக்க விரும்புகிறேன். அவர் ஒரு தரம் குறைந்த பொய்யர் மற்றும் அதர்மம் நிறைந்த தலைவர். கடந்த 8 ஆண்டுகளாக கட்சிக்காக என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி மிகுந்த அன்பையும், மரியாதையையும் பகிர்ந்து கொள்கிறேன். அது ஒரு பெரிய பயணம். மற்றவர்களை காயப்படுத்துவது என்பது இந்து தர்மம் அல்ல. அண்ணாமலையின் கீழ் என்னால் தொடர முடியாது, சமூக நீதியையும் எதிர்பார்க்க முடியாது.

பெண்களே பாதுகாப்பாக இருங்கள், யாரோ ஒருவர் உங்களை காப்பாற்றுவார் என எதிர்பார்க்காதீர்கள். யாரும் வரமாட்டார்கள், நீங்கள் உங்களையே சார்ந்து இருங்கள். உங்களை நீங்களே நம்புங்கள், உங்களுக்கு மரியாதை இல்லாத இடத்தில் இருக்காதீர்கள். அனைத்து வீடியோக்களையும், ஆடியோக்களையும் காவல்துறையிடம் ஒப்படைக்க நான் தயாராக உள்ளேன். அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும். அவர் ஒரு மோசமான நபர். அதோடு, எனக்கு தொந்தரவு அளிக்கும் வார் ரூம் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும்” என காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களைச் சந்தித்தார். 

”புதுக்கோட்டையில் இறையூர் கிராமத்தில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறது. திமுக சாதி இல்லா சமுதாயம் உருவாக்குவோம் என கூறுகின்றனர். ஆனால் புதுக்கோட்டையில் தொடர்ந்து பிரச்சனை – இரட்டை டம்ப்ளர் பிரச்சனை, சமூதாய தண்ணீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுப்பப்பட்டது என்பது தெரியவில்லை. தமிழகத்தில் தான் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை ஆர்.கே நகரில் எம்.எல்.ஏ, பணியில் இருந்த மாநகராட்சி ஊழியர் ஒருவரை வெறும் கையில் சாக்கடையை சுத்தம் செய்ய வைத்துள்ளார். எம்.எல்.ஏ எபினேசர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக – மஸ்தான் தஸ்தகீர் கொலை வழக்கில், நிர்வாகிகளுக்கே பாதுக்காப்பு இல்லை. மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். 

மேலும் “கட்சியிலிருந்து யார் விலகினாலும் புகழ்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. கட்சியை விட்டு விலகினாலும் அவரது வாழ்க்கை நன்றாக இருக்கட்டும். கட்சியிலிருந்து பல காரணங்களுக்காக ஒருவர் வெளியேறுகின்றனர். என் மேல் புகார் அளிக்காதவர்கள் யாரும் இல்லை. புகார் அளிப்பது நல்லது தான் என்றும் அது தான் பேசும் பொருளாக மாறுகிறது. காயத்ரி ரகுராம் எங்கு சென்றாலும் நல்லா இருக்கட்டும். என் மீது புகார் வைக்காதவர்கள் யாரும் இல்லை" என குறிப்பிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget