கொரொனா விதிமுறை மீறிய திரையரங்குக்கு 5000 அபராதம் விதிப்பு
விதியை மீறிய திரையரங்கிற்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், விதியை மீறிய திரையரங்கிற்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் அளவு என்பது மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. தொற்றின் அளவு தினமும் 4000ஐ கடந்து பதிவாகி வருவதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இன்று மார்ச் 10ம் தேதி முதல் ஏற்கனவே நடப்பில் உள்ள சில கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. மேலும் அதை சரிவர கடைபிடிக்காதபட்சத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசு எச்சரித்தது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இயங்கி வரும் லட்சுமி திரையரங்கில் கொரொனா விதிமுறைகளான 50 சதவீத இருக்கைகள் கொண்டு திரைப்படங்கள் ஒளிபரப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை மீறி அனைத்து இருக்கைகளையும் நிரப்பி திரைப்படத்தை திரையிட்டதாக வந்த புகாரையடுத்து ஆற்காடு வருவாய்த்துறையினர் அந்த திரையரங்குக்கு ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் விதித்துள்ளனர்.