மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர் வரத்து 903 கன அடியாக நீடிப்பு..

மேட்டூர் அணையில் இருந்து 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரானது குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 884 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 903 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 903 கன அடியாக உள்ளது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 903 கன அடியாக நீடிப்பு..

அணையின் நீர் மட்டம் 108.42 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 76.18 டி.எம்.சி ஆகவும் உள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியில் இருந்தது 29 ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுவரும் நீர் 300 கன அடியாக இருந்த நிலையில் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்கான பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீரானது மூடப்பட்டது . விவசாய பணிகள் முடிவடைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது. நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 903 கன அடியாக நீடிப்பு..

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 119.17 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 42 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1023 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4182 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 63.32 கன அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 18.44 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 188 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன?  என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன? என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Happy Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன?  என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன? என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Happy Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Indian Army Day 2025: மக்களே! இந்திய ராணுவம் பற்றி கட்டாயம் நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது இதுதான்
Indian Army Day 2025: மக்களே! இந்திய ராணுவம் பற்றி கட்டாயம் நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது இதுதான்
Pongal 2025: மாட்டு பொங்கல், சரியான நேரம் என்ன? முக்கியத்தும் பற்றி தெரியுமா? எப்படி கொண்டாடலாம்?
Pongal 2025: மாட்டு பொங்கல், சரியான நேரம் என்ன? முக்கியத்தும் பற்றி தெரியுமா? எப்படி கொண்டாடலாம்?
தொடர் விடுமுறை... பழனி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை... பழனி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்
Ajith - Vijay: தளபதிக்கு
Ajith - Vijay: தளபதிக்கு "தல" கணமா? கடைசி வரை அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்!
Embed widget