Attendance Registration : ஆசிரியர்களுக்கான வருகை பதிவு : செயலியில் இனி நாளை முதல்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..
மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு நாளை முதல் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
![Attendance Registration : ஆசிரியர்களுக்கான வருகை பதிவு : செயலியில் இனி நாளை முதல்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.. The school education department inform attendance registration for teachers registered on the app from tomorrow Attendance Registration : ஆசிரியர்களுக்கான வருகை பதிவு : செயலியில் இனி நாளை முதல்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/31/9bdd732ecb658102fac028cce85c5aff1659243196_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு நாளை முதல் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு போன்றவற்றை செயலி வழியாக ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும். செயலி வருகைப்பதிவு நடைமுறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
ஆசிரியர் வருகை, மாணவர் வருகை பதிவுசெய்யும் முறை :
- முதலில் மாணவர்கள் வருகையை அந்த அந்த ஆசிரியர்களின் user Id and password ஐ பயன்படுத்தி மட்டுமே பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு கண்டிப்பாக logout செய்ய வேண்டும் logout செய்தால் மட்டுமே save ஆகும்.
- ஆசிரியர் பள்ளிக்கு வராத சூழலில் தலைமையாசிரியர் தங்களின் பள்ளி user id and password ஐ பயன்படுத்தி அந்த ஆசிரியரின் வகுப்பு மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும்.
- ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் போது ஆசிரியர் வருகை மற்றும் local body staff வருகையையும் பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்த பின் கண்டிப்பாக logout செய்ய வேண்டும்.
- தலைமையாசிரியர் setting ல் இருக்கும் school information, today's status. staff list, student list ஆகியவற்றை sync செய்யவேண்டும், அதன் பிறகு தான் வருகையை பதிவு செய்ய முடியும்.
- ஆசிரியர்கள் தங்கள் user id and password ஐ பயன்படுத்தி முதலில் today's status, student list ஆகியவற்றை sync செய்யவேண்டும். அதன் பிறகு தான் வருகையை பதிவு செய்ய முடியும்.
- தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இறுதியில் logout செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தற்செயல் விடுப்பு உள்ளிட்ட பணிப் பலன்களை பெற நேரடியாக விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளது. இதை எளிமையாக்கும் விதமாக பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு, தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கிறது. மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிடவும், அதைக் கண்காணிக்கவும் ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த ஆப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)