மேலும் அறிய

TN Weather Update: இன்று 19 மாவட்டங்கள் நாளை 9 மாவட்டங்கள்.. எங்கெல்லாம் மழை வெளுக்கப்போகிறது?

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களிலும் நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில்  அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள்,   நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை, தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி,    ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஜூன் 8 ஆம் தேதி, தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில், தமிழகத்தில்  ஓரிரு   இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு:

06.06.2024 முதல்  10.06.2024 வரை: அதிகபட்ச     வெப்பநிலை,    தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் / இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 9, தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 8, பெருங்களூர் (புதுக்கோட்டை), பாலக்கோடு (தர்மபுரி), மிமிசல் (புதுக்கோட்டை), பொன்னேரி (திருவள்ளூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), திருமங்கலம் (மதுரை), சிங்கம்புணரி (சிவகங்கை) தலா 7, பெலாந்துறை (கடலூர்), விருதாச்சலம் (கடலூர்), ஆலந்தூர் (சென்னை), சென்னை விமானநிலையம்  (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), கரூர் (கரூர்), மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), அன்னவாசல் (புதுக்கோட்டை) தலா  6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

தமிழக கடலோரப்பகுதிகள்:

06.06.2024 முதல் 10.06.2024 வரை: குமரிக்கடல் பகுதிகள், மன்னார்  வளைகுடா மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

06.06.2024: தென்மேற்கு  மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலின்  வடக்குபகுதிகள், மத்திய வங்கக்கடலின்  தெற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

07.06.2024: மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08.06.2024 முதல் 10.06.2024 வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

07.06.2024 முதல் 10.06.2024 வரை: கேரள -   கர்நாடக கடலோரப்பகுதிகள்   மற்றும்    லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
Prashant Kishor: விஜய் ஒரு தலைவரே இல்லை...தொண்டர்களை பதற வைத்த பிரஷாந்த் கிஷோர்...
விஜய் ஒரு தலைவரே இல்லை...தொண்டர்களை பதற வைத்த பிரஷாந்த் கிஷோர்...
Aadhav Arjuna: விஜயின் பேண்ட், சட்டையைக் கூட காப்பி அடிக்கின்றனர்; தவெக விழாவில் திமுகவைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா!
Aadhav Arjuna: விஜயின் பேண்ட், சட்டையைக் கூட காப்பி அடிக்கின்றனர்; தவெக விழாவில் திமுகவைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
Prashant Kishor: விஜய் ஒரு தலைவரே இல்லை...தொண்டர்களை பதற வைத்த பிரஷாந்த் கிஷோர்...
விஜய் ஒரு தலைவரே இல்லை...தொண்டர்களை பதற வைத்த பிரஷாந்த் கிஷோர்...
Aadhav Arjuna: விஜயின் பேண்ட், சட்டையைக் கூட காப்பி அடிக்கின்றனர்; தவெக விழாவில் திமுகவைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா!
Aadhav Arjuna: விஜயின் பேண்ட், சட்டையைக் கூட காப்பி அடிக்கின்றனர்; தவெக விழாவில் திமுகவைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா!
TVK 1st Anniversary: தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..#GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..#GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
Aadhav Arjuna: ’’நாங்கதான் எதிர்க்கட்சி; விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர்’’- ஈபிஎஸ்ஸுக்கு ஸ்கெட்ச் போடும் ஆதவ்அர்ஜூனா?
Aadhav Arjuna: ’’நாங்கதான் எதிர்க்கட்சி; விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர்’’- ஈபிஎஸ்ஸுக்கு ஸ்கெட்ச் போடும் ஆதவ்அர்ஜூனா?
Prashant Kishor: விஜய்யின் நம்பிக்கையாக மாறிய பிரசாந்த் கிஷோர்! யார் இவர்? ஏன் இந்த முக்கியத்துவம்?
Prashant Kishor: விஜய்யின் நம்பிக்கையாக மாறிய பிரசாந்த் கிஷோர்! யார் இவர்? ஏன் இந்த முக்கியத்துவம்?
Watch Video: விஜய் தொடங்கிய கையெழுத்து இயக்கம்.. கையெழுத்து போட மறுத்த பிரசாந்த் கிஷோர்
Watch Video: விஜய் தொடங்கிய கையெழுத்து இயக்கம்.. கையெழுத்து போட மறுத்த பிரசாந்த் கிஷோர்
Embed widget