மேலும் அறிய
Advertisement
ரேடியோவில் கோரிக்கை வைத்த மருத்துவர்; நகைகளை அடகு வைத்து 100 மின்விசிறி வழங்கிய தம்பதி
இ.எஸ்.ஐ., மருத்துவர் ஒருவர், கொரோனா நோயாளிகளுக்கு மின்விசிறி தேவைப்படுவதாக எப்.எம்., ஒன்றில் வைத்த கோரிக்கைக்கு செவி சாய்த்த கோவை தம்பதி, தனது நகைகளை அடகு வைத்து 100 மின்விசிறிகள் வாங்கித் தந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனை, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 700 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குளிர் சாதன வசதியை பயன்படுத்தக் கூடாது என அரசு அறிவுறுத்தி இருந்ததால், கொரோனா வார்டில் அரசு சார்பில் 300 மின்விசிறிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கோடை காலம் என்பதாலும் மின் விசிறிகள் குறைவாக இருந்ததாலும் காற்று இல்லாமல் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வந்தன. இப்பிரச்சனையை நிவர்த்தி செய்ய விரும்புவோர், மின்விசிறிகளை வழங்கலாம் என அம்மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவீந்தரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனை ரேடியோவில் கேட்டு வந்த பெயர் மற்றும் விபரங்களை வெளியிட விரும்பாத ஒரு தம்பதியினர் இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்தரனிடம் 100 மின்விசிறிகளை வழங்கியுள்ளனர்.அதிலும் தாங்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அடகு வைத்து மின்விசிறி வாங்கி தந்தது தான் அதில் குறிப்பிடத்தக்கது.
தம்பதிகளின் இச்செயல் குறித்து இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவீந்தரனிடம் கேட்ட போது, "கோடை காலம் என்பதால் மின்விசிறி இல்லாமல் நோயாளிகள் சிரமப்பட்டனர். இதனால் மின்விசிறிகளை வழங்குமாறு கேட்டிருந்தோம். இதனை ரேடியோவில் கேட்டு வந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு தம்பதியினர் 100 மின்விசிறிகளை தந்தனர். பணம் இல்லாததால் தங்க நகைகளை அடகு வைத்து 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மின் விசிறிகளை வாங்கி வந்து தந்தனர்.
அதனை நான் ஏற்க மறுத்து, நான்கைந்து மின்விசிறிகள் கொடுத்தால் போதும் என்றேன். ஆனால் அவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் உறுதியாக இருந்தனர். உடனே கோவை மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அவர்களிடம் பேச வைத்தேன். அத்தம்பதியினர் மனம் வருந்தக்கூடாது என்பதால் மின்விசிறிகளை வாங்கிக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியதால், மின்விசிறிகளை பெற்றுக் கொண்டோம். தற்போது 100 நோயாளிகளுக்கு மின்விசிறிகள் பயனளித்து வருகிறது. இதுபோல வேறு யாரும் உதவி செய்ததில்லை. இந்த மனம் வேறு யாருக்கும் வராது" என்றார்.
பெயர் மற்றும் விவரங்களை வெளியிட விரும்பாத தம்பதியின் இந்த மனிதநேய செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. புகைப்படங்கள் வெளியாவதை கூட அவர்கள் விரும்பவில்லை. என்றாலும், அவர்களின் இந்த சேவை மனப்பான்மையை போற்ற வேண்டிய கடமை நமக்கு இருப்பதால் அவர்களின் புகைப்படங்களை பகிர்கிறோம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion