கரூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 4வது மாவட்ட மாநாடு
வருவாய்த்துறை என்பது மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றும் துறை. அரசு இயந்திரத்துக்கு மூளையாக செயல்படும் துறை என முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களே கூறியுள்ளார்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 4வது மாவட்ட மாநாடு கரூரில் நடைபெற்றது.
கரூரில் அழகம்மை மஹாலில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் நாலாவது மாவட்டம் மாநாடு மாவட்ட தலைவர் வைரப் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கத்தின் மாநில பொது செயலாளர் சங்கரலிங்கம் துவக்க உரையாற்றினார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மாநில தலைவர் எம்பி முருகையன் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த சங்கத்தின் அறுபதாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் 22 மற்றும் 23ம் தேதிகளில் சென்னை மாநகரில் வைர விழா மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இதன் முன்னோட்டமாக தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் மாவட்ட மாநாடு நடைபெற்று வருகிறது. அதேபோல கரூரிலும் மாவட்ட மாநாடு நடைபெற்றது. வருவாய்த்துறை என்பது மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றும் துறை. அரசு இயந்திரத்துக்கு மூளையாக செயல்படும் துறை என முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களே கூறியுள்ளார். சமீப காலத்தில் மகளிர் உரிமை திட்டத்தில் 2 மாத காலத்திலேயே ஒரு கோடிக்கு மேலான மகளிர் சேர்த்து உரிமை தொகையைப் பெற்றுத் தந்தது வருவாய்த்துறை.
அதே போல நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் நடத்துவதும் வருவாய் துறை தான். அரசின் முக்கிய திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்வது வருவாய் துறை இப்படிப்பட்ட துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக அரசிடம் முன்வைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற உள்ள எங்கள் சங்கத்தின் வைரவிழா மாநாட்டில் இந்த கோரிக்கையை முன்னெடுப்பாக வைத்து மாநாட்டில் பங்கு பெற உள்ள முதலமைச்சர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என இந்த மாநாட்டின் மூலம் கேட்டுக்கொள்கிறோம். அதே போல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதான ஒரே கோரிக்கையான பங்களிப்பு ஊதியத்தை ரத்து செய்து விட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழக அரசு பொறுப்பு ஏற்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார் என நம்பி வருகிறோம் என தெரிவித்தார்.