TASMAC: டாஸ்மாக் நேரம் மாற்றம்: இனி காலை கடை குளோஸ்... மதியம் 12 மணி - இரவு 10 மணி வரை மட்டுமே!
TASMAC Opening Closing Time: தமிழகத்தில் மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் செயல்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் செயல்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஜூலை 5 ஆம் தேதி முதல் காலை 10 மணிமுதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையின் நேரம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காலத்தில் அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் போன்று டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததால் தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளுக்கும் தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் நேரம் மட்டும் மாற்றியமைக்கப்பட்டு வந்தன.
அதன்படி கடந்த ஜூலை 5ஆம் தேதி முதல் காலை 10 மணிமுதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது திடீரென தமிழகத்தில் மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் செயல்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, மதுவிலக்கு சாத்தியமா, அரசே மதுக் கடைகளை நடத்தலாமா என்பன போன்ற நீண்ட கால விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு இடையே கொரோனா காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்ற முந்தைய அதிமுக அரசின் முடிவை, தற்போதைய திமுக அரசும் எடுத்தது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது விமர்சிப்பது எளிது, ஆனால் அரசை நடத்தும்போதுதான் சில நடைமுறைச் சிக்கல்கள் தெரியவரும் என்று அதிமுகவினர் பதிலுக்கு விமர்சித்து வந்தனர்.
“போலி மது மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன; கொரோனா தடுப்பு விதிகள் மீறப்பட்டால் டாஸ்மாக் மூடப்படும்" என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">All Tasmac shops in Tamil Nadu will operate as per pre-covid timings which is 12 noon to 10 PM with immediate effect. Currently, outlets are operating from 10 AM to 8 PM <a href="https://twitter.com/THChennai?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>@THChennai</a> <a href="https://t.co/fRFnZWVEoL" rel='nofollow'>pic.twitter.com/fRFnZWVEoL</a></p>— Sangeetha Kandavel (@sang1983) <a href="https://twitter.com/sang1983/status/1466653891701796866?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>December 3, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பேஸ்புக் பக்கத்தில் தொடர
ட்விட்டர் பக்கத்தில் தொடர
யூடியூபில் வீடியோக்களை காண