TVK First Conference: ஆஞ்சநேயர் ஆசியுடன் நடக்கும் தவெக முதல் மாநாடு... இடத்தை ஆய்வு செய்த ஏடிஎஸ்பி...
பிரமாண்டாக தயாராகும் தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநாடு, வருகின்ற 3ம் தேதி தலைவர் விஜய் இடத்தை ஆய்வு செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம்: தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி பகுதியில் நடத்த இடத்தை தேர்வு செய்த இடத்தில் தமிழக வெற்றிக்கழக பொதுசெயலாளர் புஸ்சி. ஆன்ந்த விழுப்புரம் மாவட்ட ஏ.டி.எஸ்.பி திருமால் நேரில் பார்வையிட்டு ஆய்வு
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு
தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக விஜய் தலைவர் மேற்கொண்டு வருகிறார். இதற்காக, அவர் சற்று தீவிரம் காட்டி வருவதை செயல்களால் பார்க்க முடிகிறது. குறிப்பாக, தவெக கட்சி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, தலைவர் விஜய் கடந்த 22ம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார். இதையடுத்து, இந்த கட்சியின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. திருச்சி, சேலம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி என பல இடங்களின் தேர்வு நடைபெறும் நிலையில், த.வெ.க., தலைமையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கான வசதியுள்ள இடமாகவும், தமிழகத்தின் மைய பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக கொண்டு, ஆலோசனை செய்து வருகின்றனர்.
விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி கோரி கடிதம்
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி திருமாலிடம் நேரில் சந்தித்து விக்கிரவாண்டி பகுதியில் 23ம் தேதி மாநாடு நடத்த அனுமதி பெற கடிதம் அளித்துள்ளார்.
மாநாடு செய்ய தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தமிழக வெற்றிக்கழக பொதுசெயலாளர் புஸ்சி. ஆன்ந்த விழுப்புரம் மாவட்ட ஏ.டி.எஸ்.பி திருமால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது எந்த இடத்தில் இருசக்கர வாகனம், கார்கள் பேருந்துகள் நிறுத்தும் இடம், மூன்று வழிகள், உணவு கூடம் குறித்து கட்சி நிர்வாகிகள் காவல் துறையினரிடம் விளக்கி கூறினர்.
தவெக பிரமாண்ட மாநாடு
அக்கடிதத்தில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி. சாலை கிராமத்தில் (23.09.2024) அன்று நடத்துவதாக திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். இந்த மாநாட்டில் எங்கள் கட்சித் தலைவர் தளபதி விஜய் அவர்கள் கலந்து கொள்கிறார்.
85 ஏக்கர் நிலப்பரப்பை வாடகை
மாநாடு நடத்துவதற்காக சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பை வாடகைக்கு பெற்றுள்ளோம். எங்கள் மாநாட்டிற்கு சுமார் 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாநாட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் முறையாக நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
வாகனங்கள் நிறுத்துவதற்கு சுமார் 5 ஏக்கர்
விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்லும் பாதையில் இடது புறம் சுமார் 28 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு பெற்றுள்ளோம், இதில் தமிழ்நாட்டின் தென் பகுதியில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே பாதையில் வலது புறம் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு பெற்றுள்ளோம். இதில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு பெற்றுள்ளோம்.
அடிப்படை வசதிகள்
மாநாட்டிற்க்கு வரும் கழகத் தோழர்களும், பொதுமக்களும் எளிமையாக கூட்ட நெரிசலின்றி வந்து செல்வதற்கு வசதியாக மாநாட்டுத் திடலில் இருந்து உள்ளே செல்வதற்கான மூன்று வழிகளும், வெளியே செல்வதற்கான மூன்று வழிகளும் அமைக்க திட்டமிட்டுள்ளோம். மாநாட்டிற்க்கு வரும் அனைவருக்கும் முறையான உணவு வசதி, தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
இவற்றுடன் தேவையான ஆம்புலன்ஸ் வேன்களும் அங்கு நிறுத்தப்பட உள்ளது. தீயணைப்புத்துறையின் அனுமதியும். பாதுகாப்பும் கோரவுள்ளோம். இம்மாநாட்டிற்கு காவல்துறை தரப்பில் இருந்து தாங்கள் கொடுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் மாநாட்டை முறையாக நடத்துவோம் என்று இக்கடிதத்தின் வாயிலாக தங்களுக்கு உறுகி அளிக்கிறேன் ஆகையால் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாநாட்டிற்குத் தேவையான முழு பாதுகாப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.