TN Rain: இரவு 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்த பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை!
TN Rain Updates: தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
6 மாவட்டங்களில் மழை:
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 6, 2024
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், இரவு நேரங்களில் வெளியே செல்வதாக இருந்தால் கவனமாகவும், முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வானிலை குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு , ஜூலை 10 ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரித்து விடுத்துள்ளதாவது, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும் , வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் ஜூலை 5 - 7 ஆம் தேதி வரை மணிக்கு சுமார் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Also Read: Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு