Rain Update: மக்களே உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கனமழை; 31 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே வெப்பச்சலனத்தின் காரணமாக பரவலாக லேசானது முதல் மிக கனமழை வரை பெய்து வருகின்றது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலை நிலவரங்கள் குறித்த ஆய்வு முடிவுகளை தெரிவித்து, மக்கள் வானிலை நிலவரத்திற்கு ஏற்றவாரு தங்களது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி எச்சரித்து வருகின்றது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 20, 2024
அவ்வகையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் கனமழையில் முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. இதன் அடிப்படையில், “ வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருத்தனி, விழுப்புரம், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், அரியலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, தூத்துக்குடி” ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.