(Source: ECI/ABP News/ABP Majha)
TN Rain Updates: ஆரஞ்சு அலெர்ட் - 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
TN Rain Update: வரும் 10ம் தேதி அன்று தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு, கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கை:
கேரளா மற்றும் தென் தமிழகத்தின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் வரும் 13-ம் தேதி வரை பரவலாக மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில், வரும் 10ம் தேதியன்று கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு:
08.10.24: திருநெல்வேலி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
09.10.24: திருநெல்வேலி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்
10.10.24: புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
11.10.24: தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
12.10.24: திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 13-ம் தேதி மேற்கண்ட மாவட்டங்களுடன் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யலாம்.
சென்னை வானிலை நிலவரம்:
அடுத்த 24 மணி நேரத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
இன்று முதல் 11-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.