![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Rain: இன்று இரவு இந்த 33 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே: சீக்கிரமா வீட்டுக்கு போங்க.!
இன்று இரவு தேனி , சென்னை , கன்னியாகுமரி உள்ளிட்ட 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
![TN Rain: இன்று இரவு இந்த 33 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே: சீக்கிரமா வீட்டுக்கு போங்க.! Tamilnadu Rain Updates today night 33 districts over Tamilnadu November 14 More Details TN Rain: இன்று இரவு இந்த 33 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே: சீக்கிரமா வீட்டுக்கு போங்க.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/14/a48830b00e796e84c21cc4e5fd63982b1731597829293572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் இன்று இரவு 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகையால் , இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சீக்கிரமாகவும் , பாதுகாப்பாகவும் வீட்டுக்குச் செல்லவும்.
33 மாவட்டங்கள்:
தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விழுப்புரம், திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நீலகிரி, கோவை, மதுரை , சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருவாரூர், நாகை, கடலூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, மற்றும் தூத்துக்குடி ஆகிய 33 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரைக்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 14, 2024
அடுத்த ஏழு இனங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும். இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை நவம்பர் 15:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர்., நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், மழை பெய்ய வாய்ப்புள்ளது.
16.11.2024 மற்றும் 17.11.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 14, 2024
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)