Pongal Rain: போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் தினம்: எந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
Tamilnadu Heavy Rain: தமிழ்நாட்டில் , அடுத்த 6 நாட்களுக்கு எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பார்ப்போம்

தமிழ்நாட்டில் நாளை போகி பண்டிகையும், நாளை மறுநாள் பொங்கல் பண்டிகையும், அதனை தொடர்ந்து மாட்டுப் பொங்கலும், காணும் பொங்கலும் கொண்டாடப்படும் நிலையில் , பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கிழக்கு இலங்கை கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
TAMIL WARNINGhttps://t.co/467dVuULiL pic.twitter.com/RUIuh7bgA1
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) January 12, 2025
12-01-2025- இன்று
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13-01-2025,14-01-2025: போகி, பொங்கல் தினம்:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15-01-2025: மாட்டுப் பொங்கல்
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16-01-2025 மற்றும் 17-01-2025:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18-01-2025:
கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (12-01-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய வேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (13-01-2033) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய வேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பறிலை 27-28 டிகிரி செய்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.





















