(Source: ECI/ABP News/ABP Majha)
TN Rain: இன்று இரவு 10 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.! ஜில்லென இருக்கும் சென்னை.!
TamilNadu Rain Updates: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 25, 2024
அடுத்து சில தினங்களுக்கான வானிலை குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26.01.2014 மற்றும் 27.86,2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
28.09.2024 மற்றும் 29.09.2024: தமிழகத்தில் ஒருசில் இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
30.09.2024 மற்றும் 01.10,2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (25.09 2024 மற்றும் 26.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.