மேலும் அறிய

22ஆம் தேதி கனமழை எச்சரிக்கை! சென்னை, தமிழக மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது!

சென்னையில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு - வடமேற்கு நோக்கி நகந்து வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான சென்னை வானிலை மையத்தின் முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை:

நேற்று (16-11-2025) இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (17-11-2025) காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.

வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.

17-11-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


22ஆம் தேதி கனமழை எச்சரிக்கை! சென்னை, தமிழக மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது!

18-11-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெவ்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

19-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

20-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

21-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மயிலாடுதுறை. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை இராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (17-11-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை/ மிக கன மழை, பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-24' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (18-11-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24" செவ்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

17-11-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18-11-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19-11-2025 முதல் 21-11-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.




22ஆம் தேதி கனமழை எச்சரிக்கை! சென்னை, தமிழக மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது!

வங்கக்கடல் பகுதிகள்:

17-11-2025: தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18-11-2025: அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19-11-2025: அந்தமான் கடல் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு-மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20-11-2025: மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு-மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21-11-2025: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

17-11-2025 மற்றும் 18-11-2025 கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

15-11-2025 முதல் 21-11-2025 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை மகா தீபத்திருவிழா... சிறப்பு நேரலை
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை மகா தீபத்திருவிழா... சிறப்பு நேரலை
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Musk on World War: “இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
“இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை மகா தீபத்திருவிழா... சிறப்பு நேரலை
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை மகா தீபத்திருவிழா... சிறப்பு நேரலை
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Musk on World War: “இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
“இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
Russia Vs Europe: “நாங்க இப்போவே ரெடி, போருக்கு வர்றீங்களா.? ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின் - என்ன நடந்தது.?
“நாங்க இப்போவே ரெடி, போருக்கு வர்றீங்களா.? ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின் - என்ன நடந்தது.?
Trump Vs Joe Biden: “செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
“செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
அடி தூள்.. தூயமல்லி அரிசி, கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு- அசத்தும் வேளாண்மை துறை
அடி தூள்.. தூயமல்லி அரிசி, கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு- அசத்தும் வேளாண்மை துறை
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
Embed widget