7 இடங்களில் சதமடித்த வெயில்: அதிக வெப்பம் எங்கே- வானிலை அப்டேட்!
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் இன்று மதுரை , வேலூர் உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டும், கரூர் பரமத்தியில் 101.3 ஃபாரன்ஹீட்டும், மதுரை நகரத்தில்101.48 பாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்ட்டும், தஞ்சாவூரில்100.4 டிகிரி பாரன்ஹீட்டும், திருச்சியில் 102.74 டிகிரி பாரன்ஹீட்டும், வேலூரில்102.38 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
Also Read: வாட் ப்ரோ! பாஜகவில் நேற்று ஒரு ரூல், இன்று ஒரு ரூலா…ஆனால் நயினார் நாகேந்திரன் ஹேப்பி!
தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கு வானிலை:
நேற்று (10-04-2025), மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (11-04-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் வலுவிழந்தது, இருப்பினும், அதே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை ( 11-04-2025 மற்றும் 12-04-2025 ) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையடுத்து 13-04-2025 முதல் 17-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் 'காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:
11-04-2025 மற்றும் 12-04-2025 ஆகிய நாட்களில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். மேலும் வரும் 15-04-2025 நாளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.





















