அஜித் குமாரின் 'Good Bad Ugly' விமர்சனம்!

Published by: ஜான்சி ராணி

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களாக உலா வரும் நடிகர்களில் அதிகளவு டான், ரவுடி, கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அஜித். இந்தப் படத்தை அவரது ரசிகரான ஆதிக் அப்படியே இயக்கியிருக்கிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்கள் கொண்டாடுவதற்காக ஒரு அஜித் ரசிகனால் உருவாக்கப்பட்ட படம் என்பது ஒவ்வொரு காட்சியிலும் நன்றாகவே தெரிகிறது.

படத்தின் கதை வழக்கமான ஒரு கதை என்றாலும், திரைக்கதையால் ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். அஜித்தின் கடந்த கால திரைப்படங்களான தீனா, பில்லா ஆகியவை அஜித்தின் ப்ளாஷ்பேக்கிற்கு மிகப்பெரிய பலம்.

அஜித்திற்கு நிகரான ஒரு வலுவான கதாபாத்திரத்தில் அர்ஜுன்தாஸ் நடித்துள்ளார். குரூரமான வில்லனாகவே நடித்திருப்பார். ஆனால், இந்த படத்தில் மிகவும் ஜாலியான ஒரு கதாபாத்திரமாகவே நடித்துள்ளார். 

ஜிவி பிரகாஷ் தனது பின்னணி இசையால் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளார்.  படத்தில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருந்த மற்ற படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

பிரசன்னாவை இன்னும் அதிகமாக பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றினாலும், சுனிலை நன்றாகவே பயன்படுத்தியுள்ளனர். த்ரிஷாவிற்கு பெரியளவு பங்கு இல்லை என்றாலும், சிறப்புத் தோற்றத்தில் சிம்ரன் மிரட்டியுள்ளார்.

படத்தில் யாருமே எதிர்பார்க்காதது ஏகே ரெட் டிராகனாக எப்படி மாறினார் என்பதற்கான ப்ளாஷ்பேக்கில் வரும் அந்த 3 கேமியோக்கள்தான் ஆகும்.