Tamilnadu Roundup: ஊட்டியில் முதலமைச்சர்.. சபரிமலையில் நடை திறப்பு - காலையில் இதுவரை
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தது போல கோடநாடு வழக்கிலும் தண்டனை பெற்றுத் தரப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி பொய் மட்டுமே கூறுவார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
வர்த்தகத்தை முன்னிறுத்தி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய டிரம்ப்
வைகாசி மாத பூஜைக்கு சபரிமலையில் இன்று நடை திறப்பு - குவியும் ஐயப்ப பக்தர்கள்
இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் விநியோகம்
12ம் வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ராஜபாளையத்தில் தனியார் பேருந்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கிய இளைஞர்களால் சாலையில் பரபரப்பு
திருவாரூரில் இடிந்து விழும் அபாயத்தில் தடுப்பணை - 2 ஆயிரம் ஏக்கர் அளவில் விவசாயம் பாதிக்கும் அபாயம்
தேனி மாவட்டத்தில் பப்பாளி விலை கடும் வீழ்ச்சி; பழங்களை பறிக்காததால் கீழே விழந்து வீணாகும் அவலம்
விழுப்புரம் மாவட்டம் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் விழா கோலாகலம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதற்கு பலத்த வரவேற்பு
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இருந்து 3 ஆயிரம் பணியாளர்கள் பணி நீக்கம்





















