(Source: ECI/ABP News/ABP Majha)
TN Headlines: குரூப் தேர்வு 4 முதல் பிரதமர் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினி பங்கேற்பு வரை: இதுவரை இன்று
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
Rajinikanth: “மோடி மூன்றாவது முறையாக பிரதமரானது சாதனை” - பதவியேற்பு விழாவுக்கு புறப்பட்ட ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியமைக்கிறார். இன்று மாலை 7 மணியளவில் அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.இதனிடையே சென்னையில் இருந்து டெல்லிக்கு ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்கள் ஒரு வலுவான எதிர்கட்சியை இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்வு செய்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான ஒன்று. அதேசமயம் நேருவுக்குப் பின் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பது சாதனை” என ரஜினிகாந்த் தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி 2வது முறையாக பதவியேற்ற போது ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-4 பதவிகளுக்கான போட்டித் தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-4 பதவிகளுக்கான போட்டித் தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.
TN School Reopen: தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு; முன்னேற்பாடுகள் தீவிரம்!
Tamil Nadu School Reopen 2024: அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அனைத்து வகை தனியார் பள்ளிகளும் நாளை (ஜூன் 10) திங்கள் கிழமை அன்று திறக்கப்பட உள்ளன.
TN BJP: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கட்சி பதவிகள்.. அண்ணாமலையை சரமாரியாக விமர்சித்த தமிழிசை!
சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் முழுமையாக திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக, பாஜக, நாம் தமிழர் எந்த இடங்களிலும் வெற்றி பெறவில்லை.
தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி ;
முதுமலை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட குட்டி யானை குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் மேற்கொண்ட பல கட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. இறுதி வரை தாய் யானை குட்டியை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
TN Weather: அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் முன்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.