TN Headlines: விஷச்சாராய பலி 55-ஆக உயர்வு; சேலத்தில் மீண்டும் சிறுத்தை; இதுவரை இன்று
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
Kallakurchi illicit liquor: இன்று காலையிலேயே 3 பேர்: விஷச் சாராய பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு
Kallakurchi illicit liquor:கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராய பாதிப்பு - மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழப்பு; தொடரும் சோகம் Kallakurichi Illicit Liquor: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர், மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் வீட்டிலேயே உயிரிழந்தார்.
Salem Leopard: சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை - பொதுமக்கள் அச்சம்
ஓமலூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை பட்டியில் அடைத்து வைத்திருந்த 5 ஆடுகளை கடித்த கொன்றது. ஒரு ஆட்டை இழுத்து சென்று வயல் பகுதியில் சாப்பிட்டு சென்றுள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி, மூக்கனூர், பூசாரிப்பட்டி, சக்கரைச் செட்டிபட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் கடந்த ஓராண்டாக சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது. இந்த சிறுத்தை வனப்பகுதியில் உள்ள மயில், குரங்கு உள்ளிட்ட விலங்குகளை அடித்து சாப்பிட்டு வாழ்ந்து வருகிறது. ஒரு சில சமயங்களில் மலையை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் புகுந்து ஆடு, மாடு, நாய்களையும் அடித்துக் கொன்று சாப்பிடுகிறது. கடந்த மாதம் காருவள்ளி பகுதியில், ஒரு நாய் மற்றும் மாட்டை அடித்து சாப்பிட்டது.
"மாடுகள் அடுத்தடுத்து பிடிபட்டால் ஏலம் விடப்படும்" அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு!
சென்னையில் மாடுகள் மற்றும் வளர்ப்பு நாய்களின் பிரச்னை அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக அமைச்சர் கே.என்.நேரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Rain Alert: தமிழகத்தில் இன்றும் 2 நாட்களுக்கு கனமழை..எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? -
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ ஜூன் 22 ஆம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து 80 கன அடியில் இருந்து 138 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது
கள்ள சாராயமோ! நல்ல சாராயமோ! தமிழ்நாட்டுக்கு மதுவே வேண்டாங்க! விட்டுடுங்க! சௌமியா அன்புமணி..
மிழ்நாட்டில் கள்ளச்சாராயமாக இருந்தால் என்ன? நல்ல சாராயமாக இருந்தால் என்ன? முழுவதுமாக கட்டுப்படுத்தி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் இளம் பெண்கள் கைக் குழந்தைகளுடன் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவன்களை இழந்து விதவைகளாக உள்ளனர். அதனால் பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என சௌமியா தெரிவித்தார்.