TN Headlines: தியானத்தை நிறைவு செய்த பிரதமர்; 14 மாவட்டங்களில் கனமழை - தமிழ்நாட்டில் இதுவரை இன்று!
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
PM Modi: 45 மணிநேர தியானத்தை முடித்த மோடி! விவேகானந்தரை தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு விசிட்!
PM Modi: கன்னியாகுமரி முக்கடல் சந்திக்கும் விவேகானந்தர் பாறையில் சுமார் 45 மணி நேரம் தியானத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, தியானத்தை நிறைவு செய்து செய்தார். இதையடுத்து, அருகில் உள்ள திருவள்ளூர் சிலையை பார்வையிட்டு, திருவள்ளுவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
TN Weather Update: இன்று 9 மாவட்டங்கள், நாளை 14 மாவட்டங்கள்.. எங்கெல்லாம் கனமழை? வெயில் எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 14 மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
TN CM MK Stalin: மூன்றே நாள்தான்; விழிப்புடன் இருங்க; விடியல் வருது - முதலமைச்சர் ஸ்டாலின்..
பாஜகவின் பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்தியாவுக்கான புதிய விடியலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றியின் முகட்டில் உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ ; திருவண்ணாமலையில் பணி ஓய்விற்கான சான்றிதழ் பெற்ற ஏடிஎஸ்பி வெள்ளத்துரை
இந்தநிலையில் 2003 ஆம் ஆண்டு அயோத்திக்குப்பம் வீரமணியை வெள்ளதுரை கொன்றபோது, மெரினா காவல் நிலைய முன்னாள் காவல் ஆய்வாளர் லாயிட் சந்திராவிடம் உள்துறை விசாரணை நடத்தியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் கொக்கி குமார் வழக்கு, மறுபுறம் வீரமணி தொடர்பாக உள்துறை செயலகம் விசாரணை நடைபெற்ற நிலையில் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில், வெள்ளதுரையின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து உள்துறைச் செயலர் அமுதா நேற்று இரவு உத்தரவிட்டார். இதையடுத்து, வெள்ளதுரை நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் இருந்து முறைப்படி பணி ஓய்வுபெற்றார். மேலும், இவருடைய பணம் 5 லட்சம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.