மேலும் அறிய

TN Headlines: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: இதுவரை இன்று!

Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

Armstrong Mayawati: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி - ”தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை”

Armstrong Mayawati: பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு, பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார்.

அங்கு பேசிய மாயாவதி, “மிகுந்த அர்பணிப்புடன் தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்த்தவர் ஆம்ஸ்ட்ராங். புத்தர் காட்டிய மனிதாபிமான் வழியில் பயணித்தவர்.  அவரது மரணம் என்பது தமிழ்நாட்டில் உள்ள தலித்துகளுக்கு ஒரு பேரிழப்பு. அவரது இறப்பை கேட்டு நான் மிகுந்த வேதனையடைந்தேன். தமிழிநாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க பகுஜன் சமாஜ் கட்சி தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கு. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை பராமரிக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி  கற்பனையில் பேசுகிறார் - பாமக தலைவர்  அன்புமணி

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி சொல்வது வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது. தினமும் கொலை, கொள்ளை நடைபெற்று வரும் நிலையில் அவர் கற்பனையில் பேசுகிறார்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது இதற்கு முக்கிய காரணம் சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தான். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் ஆறாக ஓடுகிறது. முதலமைச்சரின் கீழ் உள்ள காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Mettur Dam: அதிரடியாக அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - இன்றைய நீர் நிலவரம் இதுதான்.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,281 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1,465 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 2,832 கன அடியாக அதிகரித்துள்ளது.

Vazhakarutheeswarar Temple : காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் .. கொடியேற்றத்துடன் துவங்கியது..

Kanchipuram Vazhakarutheeswarar Temple : "காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவிலில், பிரம்மோற்சவத்தின், இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது"

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சிவ ஆலயங்களில் ஒன்றாக வழக்கறுத்தீஸ்வரர் கோயில் உள்ளது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது.

TNPL 2024: SSS vs SMP: 4 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தி மதுரை பேந்தர்ஸ் அணி த்ரில் வெற்றி.

ஆட்டத்தின் இறுதி ஓவரின் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்,மதுரை அணியின் வீரர் முருகன் அஸ்வின் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து மதுரை அணியை வெற்றி பெறச்செய்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Embed widget