மேலும் அறிய

TN Headlines: ஆம்ஸ்ட்ராங் படுகொலை: முதல்வர் இரங்கல், கதறி அழுத திருமாவளவன்: இதுவரை இன்று

Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி - உடைந்து கதறி அழுத திருமாவளவன், பா.ரஞ்சித் BSP Armstrong Murder:

பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், 6 பேர் கொண்ட கும்பலால் நேற்று பெரம்பலூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த விசிக தலைவர் திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கண்டு கலங்கி அழுதார். அப்போது உடனிருந்த இயக்குனர் பா. ரஞ்சித், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கண்டதும் மனமுடைந்து கதறி அழுதார். அவரை திருமாவளவன் தாங்கிப் பிடித்த போது இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல், கண்ணீர் வீட்டு கதறி அழுதார். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது, திருமாவளவன் கலங்கி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை, “சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல என்றும் ஆம்ஸ்ட்ராங்கிற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும் என்றும், விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

BSP Armstrong : பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தி இரங்கல்..

”திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”

குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என எக்ஸ் பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின்  தெரிவித்திருக்கிறார்.

விவசாயிகளே காரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யுங்கள் நடப்பு 2024 - 2025 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பதிவு செய்யலாம்.

காரீப் பருவ (நெல், மணிலா, சாமை, மக்காச்சோளம், கம்பு போன்ற) பயிர்களுக்கு பிரமியம் தொகை மற்றும் செலுத்தவேண்டிய கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல் 1 ஏக்கருக்கு பிரிமியம் ரூ690 காப்பீடு செய்ய கடைசி நாள் 15.07.2024 மணிலா 1 ஏக்கருக்கு பிரிமியம் ரூ590 காப்பீடு செய்ய கடைசி நாள் 31.07.2024 மக்காச்சோளம் 1 ஏக்கருக்கு பிரிமியம் ரூ436- காப்பீடு செய்ய கடைசி நாள் 16.08.2024 கம்பு 1 ஏக்கருக்கு பிரிமியம் ரூ 272- காப்பீடு செய்ய கடைசிநாள் 31.07.2024 மற்றும் சாமை 1 ஏக்கருக்கு பிரிமியம் ரூ 190- காப்பீடு செய்ய கடைசி நாள் 16.08.2024 ஒவ்வொரு அறிவிக்கை செய்த பயிர்களுக்கும் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு செய்யலாம்.

TVK Vijay: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - கொந்தளித்த த.வெ.க., தலைவர் விஜய் - ”சமரசமின்றி சட்ட-ஒழுங்கை நிலை நாட்டிடுக” TVK Vijay:

தமிழ்நாடு அரசு சட்ட ஒழுங்கை காத்திட வேண்டும் என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

முதல்வரிடம் தொலைபேசியில் கோரிக்கை.. 24 மணிநேரத்தில் மாறிய மாற்றுத்திறனாளியின் வாழ்க்கை..

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த 24 மணிநேரத்தில், கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பேட்டரி ஸ்கூட்டர், ஒரு லட்சம் கடனுதவி மற்றும் ரூபாய் 2000 ஆக மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்குவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் வழங்கினார். முதல்வரிடம் கோரிக்கை வைத்த 24 மணிநேரத்தில், நடவடிக்கை எடுத்ததற்கு முதல்வருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு திடீர் வயிற்று வலி - தண்ணீரில் ஏதோ கலந்துட்டாங்க என மக்கள் புகார்

தருமபுரி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஒருவர் இறங்கி ஏறியதால், ஏதேனும் கலந்து இருக்கலாம் என பொதுமக்கள் புகார்

மாணவர்கள் அச்சமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மருத்துவர் குழு மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள அலுவலக குழு ஆய்வு செய்து குடிநீரை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும் குடிநீர் தொட்டியில் ஏதேனும் கலந்து இருக்கலாம் என்ற தகவல் பரவியதாலும், மாணவர்களுக்கு உபாதைகள் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் பரவியதாலும், அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் பெற்றோர்கள், அச்சமடைந்து, பள்ளிக்கு போன் மூலமாகவும், நேரில் வந்து விசாரணை செய்தனர்.  இதனால் கம்பைநல்லூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget