TN Headlines: மேட்டூர் அணை திறக்க முதல்வர் உத்தரவு; திமுக அரசை தாக்கிய இபிஎஸ்: இதுவரை இன்று
Tamilnadu Headlines Today: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறித்து டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு:
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறித்து டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் மற்றும் உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்
EPS: ”இதுதான் உண்மை. திமுக போராட்டம் நடத்தியது இதுக்குத்தான்” - இ.பி.எஸ் விமர்சனம்
Edappadi Palanisamy:நேற்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் திமுக போராட்டம் நடத்திய நிலையில் , போராட்டம் நடத்தியது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஜனவரி 1 முதல் தற்போதுவரை 595 கொலைகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் திமுக மீது மக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர். விலைவாசி உயர்ந்துவிட்டது. போதைப்பொருட்கள் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதை மறைக்கவே, மத்திய அரசு மீது போராட்டத்தை நடத்தியிருக்கிறது. இதுதான் உண்மை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Perungalathur Flyover : பெருங்களத்தூரில் இனி 'நோ' டிராபிக் ஜாம்.. செயல்பாட்டிற்கு வருகிறது மேம்பாலம்.. இனி ஜாலியா ஊருக்கு போகலாம்
perungalathur flyover status : சென்னை பெருங்களத்தூரில் மேம்பாலம் பணிகள் முடிவடைந்த நிலையில், தாம்பரம் வண்டலூர் இடையிலான மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
Tamilrockers Admin Arrest: மதுரையை சேர்ந்த தமிழ்ராக்கர்ஸ் தளத்தின் அட்மின் கேரளாவில் கைது..
கைது செய்யப்பட்ட தமிழ்ராக்கர்ஸ் அட்மின், ஸ்டீபன் ராஜை போலீசார் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார், முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார், முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது. இந்த வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
TN Rain:அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு:
இந்த 4 மாவட்டங்களுக்கு மாலை வரை மழை இருக்கு..!வானிலை மையம் எச்சரிக்கை..! Tamilnadu Rain: தமிழ்நாட்டில் உள்ள ஒருசில இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு , வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.