TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு! இதோ
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் ஜூலை 22-ம் தேதி காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்.. ஆடி கருட சேவை கோலாகலம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்சம் அருளும் ஆடி மாத கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.தங்க கருட வாகனத்தில் வலம் வந்த வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு கற்பூர ஆரத்தி கொடுத்து பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான,உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம்,ஆனி மாதம், ஆடி மாதம், என மூன்று கருட சேவை உற்சவங்கள் கோலாகலமாக நடைபெற்றது.
“தமிழ்நாட்டில் உள்ள கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமம்’ மன்னார்குடி அருகே சிறப்பு வழிபாடு..!
நடக்கவிருக்கும் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் எனவும் கமலா ஹாரிஸ்ன் பூர்விக கிராமமான மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரத்தில் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருந்த ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகியதால், புதிய அதிபர் வேட்பாளராக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
உதயநிதி துணை முதலமைச்சரானால், ஹிந்து தர்மத்துக்கு ஆபத்து.. ஹெச்.ராஜா பேச்சு
ஸ்ரீ திரு விக்ரம மகாதேவ ஞான வல்லப தத்தாத்ரேயர் மகா யாகம் ஆலய நிறுவனர் ஸ்ரீ லலிதா வல்லபாந்தமை தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”சனாதன தர்மத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆகையால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி வைத்துள்ளதால் மாணவர்களிடம் பள்ளி கட்டணமாக வாங்க முடியாது என்பதால் சனாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார்.” என்று தெரிவித்தார்.
”பதவியை ராஜினாமா செய்தார் த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா” இது தான் காரணமா..?
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக நாம் அவரை தொடர்புகொண்டு கேட்டபோது, இளைஞரணி தலைவர் பதவியைதான் ராஜினாமா செய்துள்ளேனே தவிர, கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பை துறக்கவில்லை. நீண்ட நெடிய நாட்கள் இளைஞரணி தலைவராக இருந்துவிட்ட காரணத்தினால் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவே இந்த பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தொடர்ந்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியிலேயே பயணிப்பேன் என்றார்