Tamilnadu Roundup 20.07.2025: தமிழ்நாட்டில் வெளுக்கும் மழை.. தவெக மா.செ.கூட்டம் ரத்து - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் தொடர் மழை; தேனி மாவட்டம் மேகமலை அருகே வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடல்
காற்றாலை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தால் ஓசூர் - பெங்களூர் நெடுஞ்சாலையில் 3 மணி நேர போக்குவரத்து பாதிப்பு
நடப்பாண்டில் மட்டும் 3வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெய்னூரில் தண்ணீர் முறையாக வராததால் 600 குடும்பங்கள் பாதிப்பு
வால்பாறையில் கனமழை; சோலையாறு அணை 2வது முறையாக நிரம்பியது
கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம்; முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
மக்களவை கூட்டத்தொடர் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் முக்கிய ஆலோசனை
இன்று நடைபெற இருந்த தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு
அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல; சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
தமிழ்நாட்டில் 15 லட்சம் ஆண்டுகள் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது - தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத்
விழுப்புரத்தில் அன்புமணி - ராமதாஸ் ஆதரவாளர்கள் இடையே திடீர் மோதல்
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளியைத் தேடி 5 தனிப்படைகள்





















